தைரியம் இருந்தால் இதை செய்யுங்கள்! அண்ணாமலைக்கு உதயகுமார் சவால்

 
udhayakumar udhayakumar

பாஜக தமிழகத்தில் வளர்ச்சி அடைய ஜெயலலிதா பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு, தங்களது கட்சியின் நிர்வாகிகள், கொள்கைகளைப் பற்றி பேசி கட்சி வளர்ச்சி அடைய செய்ய தயாரா ? முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி குன்னத்தூரில் உள்ள மறைந்த எம்ஜிஆர் , ஜெயலலிதா திருஉருவ ச் சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில், 200க்கும் மேற்பட்ட இளைஞர்களை அதிமுக - வில்  இணைக்கும் விழா நடைபெற்றது.

இதனை தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் .பி.உதயகுமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், பாஜக தலைவர் அண்ணாமலை தங்களது கட்சியை வளர்ச்சி அடைய ஜெயலலிதா பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு,  பாஜக கட்சியினுடைய கொள்கைகளையும், கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை பேசி தமிழக மக்களுடைய நம்பிக்கையை பெற்று, தமிழகத்தில் பா ஜக - வை வளர்ச்சி அடைய செய்ய தயாராக இருக்கிறாரா? எனவும்,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா பெயரை பேசி வருவதால் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் பேசினார்.