பெகாசஸ் சாப்ட்வேர் கொள்முதல்.. ஜனநாயகத்தின் வெட்கக்கேடான கடத்தல், தேசத்துரோகச் செயல்.. காங்கிரஸ்

 
பெகாசஸ் சாப்ட்வேர் விவகாரம்

இஸ்ரேலிடமிருந்து மோடி அரசு பெகாசஸ் சாப்ட்வேர் கொள்முதல் செய்தது, ஜனநாயகத்தின் வெட்கக்கேடான கடத்தல் மற்றும் தேசத்துரோகச் செயல் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் சிங் படேல் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பணியில் இருக்கும் நீதிபதி, வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸை பயன்படுத்தி அடையாளம் தெரியாத அமைப்பால் கண்காணிக்கப்பட்டு இருக்கலாம் என்று பல மாதங்களுக்கு முன் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. இதனையடுத்து இந்த விவகாரத்தை குறிப்பிட்டு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. 

பிரதமர் மோடி

இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று, 2017ல் பிரதமர் மோடியின் இத்தாலி பயணத்தின் போது, இந்தியா-இஸ்ரேல் இடையே அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்புடைய ஒப்பந்தம் கையெழுத்தானது இந்த ஒப்பந்தத்தில் பெகாஸ் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்தததாக குறிப்பிட்டு இருந்தது. இதனையடுத்து பெகாசஸ் விவகாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெகாசஸ் சாப்ட்வேரை கொள்முதல் செய்ததை ஜனநாயகத்தின் வெட்கக்கேடான கடத்தல் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இது தொடர்பாக கூறியதாவது:

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

ஜனநாயகத்தின் வெட்கக்கேடான கடத்தல் மற்றும் தேசத்துரோகச் செயல். 2017ல் பிரதமர் மோடியின் பயணத்தின்போது இஸ்ரேலிடம் இருந்து சுமார் 200 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறை கருவிகள் உள்பட ஒரு தொகுப்பின் மையப்பொருளாக மோடி அரசாங்கம் பெகாசஸை மற்ற ராணுவ தொழில்நுட்பங்களுடன் வாங்கியது. சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் மற்றும் புதிய வெளிப்பாடு (உளவு பார்த்தது விவகாரம்) இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, காங்கிரஸ் எப்போதும் கூறிவந்தது. மோடி அரசாங்கம் இஸ்ரேலின் கண்காணிப்பு ஸ்பைவேர் பெகாசஸ் மூலம் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு முரணான உளவு மற்றும்  மோசடியை செயல்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியும் இது ஈடுபட்டுள்ளார்.