மோடியின் பேச்சை கேட்க மக்கள் கூட்டம் இல்லை என்பதே கூட்டத்தை ரத்து செய்ய காரணம்... நட்டாவுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்

 
காங்கிரஸ்

மோடிஜியின் பேச்சை கேட்க மக்கள் கூட்டம் இல்லை என்பதே கூட்டத்தை  ரத்து செய்ய காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணம் நேற்று பாதுகாப்பு குளறுபடி காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பஞ்சாப் காங்கிரஸ் அரசாங்கத்தை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் ஜே.பி. நட்டாவின் குற்றச்சாட்டுக்கு பாயிண்ட் பை பாயிண்டாக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டிவிட்டரில், அன்புள்ள நட்டாஜி நிதானத்தை இழப்பதையும் அனைத்து உரிமையையும் இழப்பதை நிறுத்துங்கள். தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள். 

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா
1. பிரதமரின் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டனர். 
2. அனைத்து ஏற்பாடுகளும், எஸ்.பி.ஜி. மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து செய்யப்பட்டன. 
3.ஹரியானா, ராஜஸ்தானில் இருந்து வரும் பா.ஜ.க. தொண்டர்களின் அனைத்து பேருந்துகளுக்கும் வழி செய்யப்பட்டது. 
4. ஹூசைனிவாலாவுக்கு சாலை பயணத்தை மேற்கொள்ளும் பிரதமரின் முடிவு அவரது அசல் பயண அட்டவணையின் ஒரு பகுதியாக இல்லை. 
5.கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் அவர்களுடன் 2 சுற்று பேச்சு வார்த்தை நடத்தினார். 

ஜே.பி. நட்டா
6.கே.எம்.எஸ்.சி. மற்றும் விவசாயிகள் ஏன் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் தெரியுமா? மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், இறந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு, எம்.எஸ்.பி. பற்றிய குழு மற்றும் விரைவான முடிவு என்பது அவர்கள் கோரிக்கை. 
7. விவசாயிகளின் போராட்டத்திற்கு பிறகு, மோடி அரசு இந்த வாக்குறுதிகளை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்தது. 8. இறுதியாக, மோடிஜியின் பேச்சை கேட்க மக்கள் கூட்டம் இல்லை என்பதே கூட்டத்தை  ரத்து செய்ய காரணம். பா.ஜ.கவின் விவசாயி விரோத போக்கை சுயபரிசோதனை செய்து பழி போடுவதை நிறுத்துங்கள், கூட்டங்களை நடத்துங்கள், ஆனால் முதலில் விவசாயிகளை கேளுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.