"மாத்தி மாத்தி பேசும் அமைச்சர்கள்; எது உண்மை?" - அரசுக்கு ராமதாஸ் கேள்வி!

 
ராமதாஸ்

பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் 2022-23ம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் இதுவரை தொடங்கப்படவில்லை. முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் மாணவர்களின் குழப்பத்தையும், மன உளைச்சலையும் அதிகரித்துள்ளன. நீட் விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ராமதாஸின் திடீர் ஆவேசப் பேச்சு, எமோஷனல் அட்வைஸ்!' - பா.ம.க-வினரை  உத்வேகப்படுத்தவா, உசுப்பிவிடவா? | political critics share their views on  pmk leader Ramadoss attitude

அச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தேவையிருக்காது. ஆனால் ஆளுநரின் ஒப்புதலே கிடைக்காத நிலையில், அடுத்த கல்வியாண்டில் நீட் விலக்கு சாத்தியமாகுமா? இந்நிலையில், எந்தச் சூழலையும் எதிர்கொள்ள வசதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படுவதுதான் சரி. ஆனால் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. தேர்வுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில், இதுவரை பயிற்சியை தொடங்காதது சரியல்ல.

நீட்' தேர்வு அறைக்குள் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் என்ன? |  What are the conditions for NEET Exam applicants in the Exam room: National  Testing Agency | Puthiyathalaimurai ...

அமைச்சர் மா.சுப்பிரமணியம்,  மாணவர் சேர்க்கை நிறைவடைந்த பிறகு பயிற்சி வகுப்புகளை அரசு தொடங்கும் என்கிறார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பயிற்சி வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன என்கிறார். இது குழப்பங்களை அதிகரித்திருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி இன்னும் தொடங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. நீட் தேர்வும் வரும் ஆண்டில் ஜூனில் நடத்தப்படலாம். நீட் தேர்வுக்கு தயாராக இன்னும் 100 நாட்கள் மட்டும் தான் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை எப்போது நடக்கும் என்பதே தெரியவில்லை. 

18 வயதிற்குட்பட்ட குழந்தை எழுத்தாளர்களுக்கு விருது: அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி அறிவிப்பு

அதை அரசு அறிவிக்கவும் இல்லை. சேர்க்கை பிப்ரவரி மாதம் நிறைவடைவதாக வைத்துக் கொண்டால், நீட் பயிற்சி நடத்துவதால் எந்த பயனும் இல்லை.  அந்த நேரத்தில் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் தான் மாணவர்கள் கவனம் செலுத்துவார்களே தவிர இந்த பயிற்சியில் கவனம் செலுத்த மாட்டார்கள். தனியார் பள்ளிகளில் பயிலும் பணக்கார மாணவர்கள் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு நீட் பயிற்சி பெறுகின்றனர். அப்படிப்பட்ட மாணவர்களுடன் 3 மாதம் கூட பயிற்சி பெறாத அரசு மாணவர்கள் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? இது மோசமான ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். 

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லி பயணம்

இதை அனுமதிக்கக் கூடாது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடே போதும் என்ற மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது. மீதமுள்ள 92.50% ஒதுக்கீட்டில் குறைந்தது 10% இடங்களையாவது அரசு பள்ளி மாணவர்கள் கைப்பற்றினால் தான் அது உண்மையான சமூக நீதி. அதை மனதில் கொண்டு அரசு திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். அதன் முதல் கட்டமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை இனியும் தாமதிக்காமல் உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.