சரக்கு பாட்டிலுடன் ராமதாஸ் போட்டோ?! விசிக, காங்., பிரமுகர்கள் மீது பாமக புகார்

 
rr

 மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.   அப்படி இருக்கும் போது  அவரது வீட்டில் அவரது அருகே மது பாட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.  அது மதுபாட்டில் அல்ல ஆலிவ் ஆயில் என்று கிஷோர்சாமி வெளியிட்ட பதிவை நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ra

 இந்த நிலையில் அந்த போட்டோவை அவதூறாக சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ்  பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டி பாமக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.

yy

 பாமக மாநில தேர்தல் பணி குழு செயலாளர் ஜெயராமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த புகார் மனுவை அளித்துள்ளார்.  அந்த புகார் மனுவில், பாமக நிறுவனர் ராமதாஸ் மதுபாட்டில் உடன் இருப்பது போன்ற பொய்யான  செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் .

மனு அளித்த பின்னர் அது தொடர்பாக பாமக வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் பாலு செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.  அப்போது தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராமதாஸ்.  அப்படி இருக்கும்போது கடந்த ஐந்தாம் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவி கண்ணா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராமதாஸ் மதுவை ஒழித்த லட்சணம்’ என்ற வாசகத்துடன் ராமதாஸின் இரண்டு புகைப்படங்களை இணைத்து அவருக்கு அருகில் மது பாட்டில் இருப்பது போன்ற வகையில் பதிவிட்டிருந்தார்.   இந்த செய்தியின் உண்மை தன்மை அறியாமல் காங்கிரஸ் பிரமுகரும் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனுமான இராம சுகந்தன் வித் நோ கமெண்ட்ஸ் எனச் சொல்லி அந்தப் பதிவை மீண்டும் பகிர்ந்து இருக்கிறார்.   இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

k

 புகைப்படத்தில் இருப்பது மது பாட்டில் அல்ல ஆலிவ் ஆயில்.  தோல் வெடிப்புக்காக பயன்படுத்தப்படும் ஆயுள்.  ஆனால் உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பிய கவி கண்ணா, காங்கிரஸ் பிரமுகர் ராமசுகுந்தன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவர்கள் செய்தி வெளியிட்டதற்கான உள்நோக்கம் குறித்தும் விசாரணை நடத்தி அந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறினார்.   மேலும் இப்படி பொய்யான செய்தியை பரப்பிய தனது கட்சி நிர்வாகிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.