12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்... இது ஒரு தலைப்பட்சமான, பழிவாங்கும் முடிவு... காங்கிரஸ் எம்.பி. ஆவேசம்

 
ரிபுன் போரா ரிபுன் போரா

கடந்த கூட்டத்தொடரில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 12 எம்.பி.க்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்தது ஒரு தலைப்பட்சமான, பழிவாங்கும் முடிவு என்று இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஒருவரான ரிபுன் போரா தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஒழுங்கீனமான நடந்த கொண்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் பூலோ தேவி நேதம், சாயா வர்மா, ரிபுன் போரா, ராஜாமணி படேல், சையது நசீர் உசேன், அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் சிவ சேனா எம்.பி.க்கள் பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டோலா சென், சாந்தா சேத்ரி மற்றும் சி.பி.எம். எம்.பி. எளமரம் கரீம், சி.பி.ஐ. எம்.பி. பினோய் விஸ்வம் ஆகிய 12 எம்.பி.க்கள்  இந்த கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

பிரியங்கா சதுர்வேதி

இது தொடர்பாக சிவ சேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், மாவட்ட நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை, அங்கு குற்றம் சாட்டப்பட்டவர் விசாரிக்கப்படுகிறார், அவர்களுக்காக வழக்கறிஞர்களும் வழங்கப்படுகிறார்கள். சில சமயங்களில் அவர்களின் பதிப்பு எடுக்க அரசு அதிகாரிகள் அனுப்பப்படுகிறார்கள். இங்கே (மாநிலங்களவை) எங்கள் பதிப்பு எடுக்கப்படவில்லை. கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தால், ஆண் மார்ஷல்கள் (சபை பாதுகாவலர்கள்) பெண் எம்.பி.க்களை எப்படி துரத்துகிறார்கள் என்பது பதிவாகி உள்ளதை நீங்கள் பார்க்கலாம். இதெல்லாம் ஒரு பக்கம், உங்கள் முடிவு மறுபுறம்? இது என்ன மாதிரியான நாடாளுமன்றத்திற்கு புறம்பான நடத்தை? என்று தெரிவித்தார்.

சாயா வர்மா

காங்கிரஸ் எம்.பி. சாயா வர்மா கூறுகையில், இந்த இடைநீக்கம் நியாயமற்றது, அநியாயம். மற்ற கட்சிகளை சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர் ஆனால் தலைவர் என்னை இடைநீக்கம் செய்தார். பிரதமர் மோடி மிருகத்தனமான பெரும்பான்மையை அனுபவிப்பதால் அவர் விரும்பியபடி செய்து வருகிறார் என்று செய்து வருகிறார். மற்றொரு காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா கூறுகையில், எங்களை இடைநீக்கம் செய்தது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது, ஜனநாயகம மற்றும் அரசியலமைப்பின் கொலை. எங்களுக்கு கேட்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ஒரு தலைப்பட்சமான, பழிவாங்கும் முடிவு. எதிர்க்கட்சிகளிடம் கருத்து கேட்கவில்லை. ஆம் நாங்கள் கடந்த அமர்வில் எதிர்ப்பு தெரிவித்தோம். நாங்கள் விவசாயிகள், ஏழை மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியுள்ளோம். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களின் குரல்களை எழுப்புவது எங்கள் கடமை.நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லையென்றால், நாங்கள் அதை எங்கே செய்வோம்? என்று தெரிவித்தார்.