எந்த நாடும் இந்தியாவை தாக்கத் துணியக்கூடாது என்பதற்காகவே நாம் பிரமோஸ் தயாரிக்க விரும்புகிறோம்.. ராஜ்நாத் சிங்

 
பிரமோஸ் ஏவுகணை

எந்த நாடுகளும் இந்தியாவை தாக்கத் துணியக்கூடாது என்பதற்காகவே நாம் பிரமோஸ் (ஏவுகணை) தயாரிக்க விரும்புகிறோம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு ஆலை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) ஆய்வகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது: எந்த நாட்டையும் தாக்குவதற்காக நாம் ஏவுகணையை தயாரிக்கவில்லை. வரலாற்றில் எந்தவொரு அண்டை நாட்டு நிலத்திலும் நாம் அத்துமீறி நுழைந்ததில்லை அல்லது எந்த நாட்டையும் ஆக்கிரமித்ததில்லை.

ராஜ்நாத் சிங்

தவறான நோக்கத்துடன் எந்த நாடுகளும் இந்தியாவை தாக்கத் துணியக்கூடாது என்பதற்காகவே நாம் பிரமோஸ் (ஏவுகணை) தயாரிக்க விரும்புகிறோம். இந்தியாவிலிருந்து பிரிந்த ஒரு அண்டை நாடு இந்தியாவை பற்றி எப்போதும் தவறான எண்ணங்களை கொண்டு இருந்தது. புல்வாமா திட்டமிட்ட தாக்குதல், ஆனால் பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. தாக்குதலை திட்டமிட்ட நாட்டின் எல்லைக்குள் சென்று தீவிரவாதிகளை கொன்றது. எல்லை தாண்டி எதிரிகளை கொல்ல முடியும் என்ற தெளிவான செய்தியை நாங்கள் வழங்கினோம்.

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ஆலைகள் உத்தர பிரதேசத்தின்  பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்க்கும். மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். 2017ம் ஆண்டு முன்பு வரை வெளியே இருந்து வரும் தொழிலதிபர்கள் இங்கு முதலீடு செய்ய பயந்தனர். ஆனால் தற்போது உத்தர பிரதேசம் வர்த்தகர்கள் வர விரும்பு சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் மாபியா ராஜ்ஜியத்தை முடிவுக்கு கொண்டு வந்து சட்டத்தின் ஆட்சியை நிறுவியதால் முதலீட்டாளர்கள் வருகிறார்கள். மிகக் குறுகிய காலத்தில் 4 விரைவு சாலைகள் போடப்பட்டன. மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உத்தர பிரதேசத்தில் வழங்கப்பட்டன. பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்துக்காக 45 நாட்களில் 200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உறுதி செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வாழ்த்து மற்றும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.