“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

சூப்பர்ஸ்டார் ரஜினி அரசியலுக்கு இதோ வருகிறார்… அதோ வருகிறார் என ரஜினியாலும் அவர்தம் ரசிகர்களாலும் எழுதப்பட்ட பொய்க்கதையின் முடிவுரைக்கு இன்று ரஜினியே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட புலி வருகிறது கதை தான் ரஜினியின் அரசியல் வருகையும். அந்த முற்றுப்புள்ளி ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு. “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது” என சன் டிவி நிகழ்ச்சியில் முழங்கியதே அவரின் அரசியல் பிரவேசத்திற்கான தொடக்கப்புள்ளி.

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

ஆனால் அதுவே முற்றுப்புள்ளியாகிவிடும் என அவரைக் கடவுளாக, மீட்பராகப் பாவித்த ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரஜினியால் புனையப்பட்ட கதைக்கு மிக முக்கிய ட்விஸ்டாக் அமைந்தது தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம். ஆம் அவரின் பேச்சால் தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாக ரசிகர்கள் கொக்கரித்தனர். ஆனால் ரஜினியோ அதையே முதலீடாக்கினார். தனது ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் ரஜினி அரசியல் குறித்து பேசாமல் இருந்தது இல்லை. அதைக் கொண்டாடமால் இருந்த ரசிகர்களும் இல்லை. இவ்வாறாக தனது ரசிகர்களுடன் கண்ணாம்பூச்சி ஆடி 21 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடத்தினார் ரஜினி.

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

அதற்குப் பின் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைகிறார். அதிலிருந்து சரியாக ஒரு வருடம் 26 நாட்கள் கழித்து அதிகாரப்பூர்வ அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறார். அதாவது 2017ஆம் ஆண்டு அவரது பிறந்தநாளான டிசம்பர் 31ஆம் தேதியில். அன்று அவரின் பேச்சில் ஒரு நம்பிக்கை துளிர்ந்திருந்தது. அவர் சொன்ன பொய்யுரைகள் பொதுஜனங்களுக்கே சுவாரசியமாகவே இருந்தன. அப்போது இருந்து தான் “சிஸ்டம் சரியில்லை” என்ற வார்த்தை தமிழ்நாட்டிற்கு பரிட்சயமானது.

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

“இந்த நேரத்தில் நான் முடிவெடுக்கவில்லை என்று சொன்னால், என்னை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை என்ற குற்ற உணர்வு நான் சாகும் வரை என்னை துரத்தும்” என்பது போன்ற பல சினிமா பஞ்ச்களை மன்றத்தில் அள்ளித் தெளித்தார் ரஜினி. அப்போது அவர் சொன்ன ஒரு பஞ்ச் காலத்தால் அழியாதது என்று சொன்னால் அது மிகைப்படுத்தி சொல்வது போல் ஆகாது. “எனக்கு பதவி வேண்டுமென்றால் நான் 1996லேயே என்னை பதவி தேடி வந்திருக்கும். 45 வயதில் பதவிக்கு ஆசைப்படாதவனா 65 வயதில் ஆசைப்படப் போகிறேன்” என்றார்.

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

இதைக் கேட்ட ரசிகர்களோ இன்ப வெள்ளத்தில் திளைத்து தாங்கள் கைலாயத்தில் இருப்பது போல உணர்ந்தனர். அன்றைய நாள் ரஜினி நிஜ கடவுளாக அவர்களுக்கு தெரிந்தார். இதற்குப் பின் 2018ஆம் ஆண்டு “ரஜினி ரசிகர் மன்றம்” to “மக்கள் மன்றமாக” உருவெடுத்தது. அதுவரையில் நற்பணிகளைச் செய்துவந்த ரசிகர் மன்றம் அரசியலுக்குள் நுழைவதற்கான காலம் என உணர்த்த இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இது ரஜினி அரசியலுக்குள் நுழைவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட சமிக்ஞை தான் என ஆருடம் சொன்னார்கள். அதற்கு முத்தாய்ப்பாக இதனை மாற்றுவதற்கு முன்னர் மூத்த அரசியல்வாதி ஆர்எம் வீரப்பன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரை சந்தித்திருந்தார்.

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

மேலும் இணையதளம் வாயிலாக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியும் படுஜோராக நடந்துகொண்டிருந்தது. எல்லாம் சிறப்பாகப் போய்க்கொண்டிருப்பதாக ரசிகர்கள் மாபெரும் கனவோடு இருந்தார்கள். தங்கள் தலைவர் தமிழ்நாட்டின் சிஎம் ஆகிவிட்டதாகவே கனவு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தனர். கனவு மட்டுமே கண்டுகொண்டிருந்தால் கோட்டையைப் பிடிக்க முடியாது என்ற உண்மை ரசிகர்களுக்கு உறைக்க ஆரம்பித்தது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றிவிட்டு நாட்களைக் கடத்துவதில் சூப்பர்ஸ்டார் எப்போதுமே கில்லி. அவருக்கு அது கைவந்த கலை. அவ்வாறாக மேலும் இரண்டாண்டுகளுக்கு ரசிகர்களைக் கடத்திச் சென்றார்.

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

இதற்கு மேல் பொறுக்க முடியாது என ரசிகர்கள் ரஜினியை நெருக்கினார்கள். காரணம் சட்டப்பேரவை தேர்தல். மக்களவை தேர்தலுக்கே வருவேன் என்று சொன்னவர், சட்டப்பேரவை தேர்தலுக்காக ஒரு துரும்பை கூட எடுத்துப் போடவில்லை. ரசிகர்கள் கலக்கமடைந்தனர். ரஜினிகாந்துக்கு அழுத்தம் ஏற்பட்டது. உடனே அறிக்கை வெளியிட்டார். 2020 டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பு என்றார். அதற்கு முன்பாக அண்ணாமலை படத்திற்காக ஹைதராபாத் படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினிகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை தான் தங்களது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைக்கும் கூர்மிகுந்த ஆயுதம் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டிச.31 வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே அறிக்கை வெளியிட்டு ஆச்சர்யத்தில் மூழ்க வேண்டிய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார். அதற்கு மன்னிப்பும் கோரினார்.

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

ரஜினி ரசிகர்களுக்கு உண்மை சுட்டது. இதற்குப் பின் போராட்டம் நடத்தி பார்த்தார்கள். ஒன்றும் வேகவில்லை. ரஜினியைப் பொறுத்தவரை ஒரு முடிவில் தெளிவாக இருப்பார். தான் எடுத்த காரியம் சிறிய அளவில் பிசுறு தட்டினாலும் யோசிக்காமல் பின்வாங்கி விடுவார். இதுவே அவரை இத்தனையாண்டு காலமாக சினிமாவில் சூப்பர்ஸ்டாராக மிளிர வைத்திருக்கிறது. இவ்வளவு காலமும் அவருடன் பயணித்த ரசிகர்களுக்கு இது புரியாமல் போனது புரியாத புதிர். இதற்குப் பிறகு வழக்கம்போல அண்ணாமலை படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு உடல் நல பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார்.

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

பரிசோதனை முடிந்து சில தினங்களுக்கு சென்னை திரும்பிய ரஜினி இன்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்கு முன் கூட அவர் கூட்டிய பரபரப்பு ஏலியன் லெவல் அரசியல் எனலாம். அதற்கு செய்தியாளர்களிடம் தெரிவித்த ஒரு வார்த்தை, “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதற்குச் சான்று. “எதிர்காலத்தில் அரசியலுக்கு நான் வரப்போகிறேனா? இல்லையா? என்ற கேள்விகளும் மனதில் இருக்கிறது அது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசிக்க உள்ளேன்” என்பதே அது.

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

அவர் மீண்டும் அரசியலுக்குள் என்ட்ரி ஆவதாக மீண்டும் பரபரப்பு செய்திகள் தொற்றிக்கொண்டன. ஆனால் சந்திப்புக்குப் பின் வெளியான அறிக்கை அதைத் தவிடுபொடியாக்கியது. எஸ் அவர் தான் ரஜினி. வழக்கம் போல அரசியலுக்குள் நுழைய எண்ணமில்லை என்றும் மக்கள் மன்றம் மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றப்பட்டு நற்பணிகள் தொடரும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. (பருத்தி மூட்ட குடோன்லேயே இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறதா?)

“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

இதைச் சொல்வதற்கு ஏன் அவர் அரசியலை இழுக்க வேண்டும்? மன்றம் பெயர் மாற்றம் குறித்து பேசுவதற்கு அரசியல் எங்கியிருந்து வந்தது? எதற்கு இந்தப் பரபரப்பைக் கூட்ட வேண்டும்? ஏனென்றால் இதுதான் ரசிகர்களிடம் ரஜினி செய்யும் பக்கா அரசியல். அவரின் அரசியல் பிரவேசத்தின் முடிவுரையின் முற்றுப்புள்ளியில் கூட அவருடைய ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றியிருக்கிறார் என்பதே தோலுரிக்கப்படாத உண்மை. இதையெல்லாம் ரசிகர்கள் என்றோ யோசித்திருந்தால் ரஜினியும் சித்து விளையாட்டை விளையாடியிருக்க மாட்டார். ரசிகர்களும் ஏமாந்து போயிருக்க மாட்டார்கள். ஒரு சூரியன் உதயாமாவதற்கு முன்பே அஸ்தமனமாவது வரலாற்றில் இதுவே முதன்முறை!