’’ரஜினி பிரச்சாரத்திற்கு வந்துவிடுவார்!’’ – அடித்துச்சொல்லும் அர்ஜூன் சம்பத்

’’ரஜினி பிரச்சாரத்திற்கு வந்துவிடுவார்!’’ – அடித்துச்சொல்லும் அர்ஜூன் சம்பத்

வரும் தேர்தலில் ரஜினி பிரச்சாரத்திற்கு வந்துவிடுவார் என்று அடித்துச்சொல்கிறார் அர்ஜூன் சம்பத்.

இந்து மக்கள் கட்சிதலைவர் அர்ஜூன் சம்பத் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்மிக அரசியல் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘’ அன்மீக அரசியல்தான் திராவிட அரசியலுக்கு மாற்று லஞ்ச ஊழல் செய்யும் அரசுகளுக்கு மாற்றாக இருக்கும். ஆன்மீக அரசியல் என்றால் கோவிலுக்கு செல்வது மட்டும் அல்ல. அதே நேரத்தில் ஆன்மீகத்தை கூறுவதும் அல்ல.

’’ரஜினி பிரச்சாரத்திற்கு வந்துவிடுவார்!’’ – அடித்துச்சொல்லும் அர்ஜூன் சம்பத்

லஞ்ச ஒழிப்பு, சாராய ஒழிப்பு என்பதுதான் ஆன்மீக அரசியல். பொதுவாக ஆன்மீக அரசியல் என்றால் வளர்சி அரசியல். வளமான, வலிமையான தமிழகத்தை உருவாக்கும் அரசியல்.’’என்றவரிடம்,

’’ரஜினி பிரச்சாரத்திற்கு வந்துவிடுவார்!’’ – அடித்துச்சொல்லும் அர்ஜூன் சம்பத்

ரஜினியின் அரசியல் குறித்து கேட்டதும், ‘’அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி தெளிவாக கூறிவிட்டார். தேர்தல் அறிவித்ததும் ரஜினி பிரச்சாரத்திற்கு வந்துவிடுவார். ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் அனைத்துக் கட்சி கூட்டமும் காணாமல் போய்விடும். ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லோரும் ரஜினி பின்னால்தான் வரப்போகிறார்கள்’’ என்றார்.