அரசியலில் கொடுக்கல், வாங்கல் இதெல்லாம் சகஜம்- ராஜேந்திர பாலாஜி

 
rajendra balaji

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோ உண்மையாக இருக்கலாம் என ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

rajendra balaji

பிரசித்திபெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோ உண்மை. ஆனால் எம்.எல்.ஏ சீட்டுக்காக தான் கே.பி.முனுசாமி ரூ.1 கோடி கேட்டார் என்பது உண்மையில்லை. அரசியலில் கொடுங்கல் வாங்கல் சகஜம், இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது அரசியல் நாகரீகம் கிடையாது. அந்த ஆடியோவில் தான் எம்.எல்.ஏ சீட்டு வாங்கி தருவதாக ஒரு இடத்தில் கூட கே.பி.முனுசாமி கூறவில்லை. அந்த ஆடியோ உண்மையாக இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் கருத்துக்கள் உண்மை இல்லை.


திமுக ஆட்சியில், மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி, கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவை பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் திமுக ஆட்சிக்கு எதிராக தான் உள்ளனர். இது எம்.பி. தேர்தலிலும் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி” எனக் கூறினார்.