விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம்!

 

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம்!

தமிழக பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்து வருகிறார். இவருக்கு விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது. அதாவது விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அவரை நீக்கி அதிமுக தலைமை அறிவித்தது.

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம்!

இந்த நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜியை நியமித்து முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் உத்தரவிட்டனர். அந்த பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்கும் வரை ராஜேந்திர பாலாஜி பொறுப்பில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.