அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற விவாதம் நீண்ட நாட்களாக உள்ளது - ராஜன் செல்லப்பா

 
eps ops

ஒற்றைத்தலைமை என்பது தொண்டர்களின் கருத்து என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார். 

அடுத்த பகீர்.. மூத்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு பதவி தர வேண்டும்..  ராஜன் செல்லப்பா சூசகம்! | Emergency meeting led by AIADMK MLA Rajan  Chellappa in ...


மதுரை அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் கட்சி கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கல்மேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு கட்சியினரிடையே பேசினார். அப்போது பேசிய அவர், “அதிமுகவினருக்கு மனது தைரியம் உள்ளது. எத்தனை எதிர்ப்பு இருந்தாலும் ஆளுகிற சக்தியாக மக்கள் மனதில் அதிமுக உள்ளது. பொதுக்குழுவில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அணிச்செயலாளர்கள் வழக்கமாக பங்கேற்பார்கள். இந்த ஆண்டு தேர்தல் ஆணைய சட்டத்தை கடைப்பிடிக்கும் வகையில் வரும் 23ம் தேதி பொதுக்குழுவில் முக்கிய நிவாகிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.அதிமுக தேர்தல் சட்ட விதியின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அடுத்த பொதுக்குழுவில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்வதாக தலைமை கூறியுள்ளது” எனக் கூறினார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, “ அதிமுக என்றாலே ராணுவக்கட்டுப்பாடு. நேற்று கட்சி அலுவலகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மிகச்சிறந்த ஆட்சியை வழங்கினார். ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக கட்சியை வழிநடத்தினார். பொதுக்குழுவில் எந்த முடிவு எடுத்தாலும் அதிமுக தொண்டர்கள் அதற்கு கட்டுப்படுவார்கள். ஒற்றைத்தலைமை குறித்து தனிப்பட்ட கருத்தை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சொல்லவில்லை. தொண்டர்களின் மக்களின் கருத்தை தலைமைக்கு சொல்லி உள்ளோம். தலைமையில் இருந்து தொண்டன் வரை பொதுக்குழு தீர்மானத்தையே பின்பற்றுவோம்.அதிமுக இயக்க தொண்டர்கள் கட்டுப்பாடோடு இருப்பார்கள். பாஜகவையோ கூட்டணியையோ விமர்சிக்க தயாரில்லை.ஒற்றைத்தலைமை என்ற விவாதம் நீண்ட நாட்களாக உள்ளது. நல்லநோக்கத்தில் ஒற்றைத்தலைமை வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் சொன்னேன். ஒற்றைத்தலைமை குறித்து தலைமையே முடிவெடுக்கும்” என பேசினார்.