ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. பஞ்சாப் மக்கள், பகவந்த் மானை ஏமாற்ற அரவிந்த் கெஜ்ரிவால் புதிய தந்திரம்.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மானை அறிவித்தது, மாநில மக்கள் மற்றும் பக்வந்த் மானை ஏமாற்றுவதற்கான அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய தந்திரம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி கடந்த வாரம் பஞ்சாபில் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளரை  அம்மாநில மக்களை தேர்ந்தெடுக்கும் நோக்கில் முதல்வர் வேட்பாளரை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என்ற பெயரில் புதிய கருத்து கணிப்பை அறிமுகம் செய்து வைத்தது. அதன்படி, 70748 70748 என்ற போன் நம்பரை மக்கள் அழைத்து, தங்களுக்கு பிடித்தமான முதல்வர் வேட்பாளரை முன்மொழியலாம். ஜனவரி 17ஆம் தேதி மாலை வரை இந்த எண்ணுக்கு அழைத்து விருப்பமான முதல்வர் வேட்பாளரின் பெயரை பரிந்துரை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. 

பக்வந்த் மான்

இந்நிலையில், இந்த கருத்து கணிப்பின் முடிவுகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக கூறுகையில், பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கருத்து கணிப்பில் 93 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்தார்.  ஆனால் போலி அழைப்புகளின் அடிப்படையில் பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ் குமார் வெர்கா இது தொடர்பாக கூறியதாவது:  அரவிந்த் கெஜ்ரிவால்  பேசும் பதில் அழைப்புகளில் உண்மை இல்லை. பஞ்சாப் மக்கள் மற்றும் பக்வந்த் மானை ஏமாற்ற அரவிந்த் கெஜ்ரிவால் புதிய தந்திரம் செய்துள்ளார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் பிரபலத்தை கண்டு ஆம் ஆத்மி அஞ்சுகிறது. அதனால்தான் கெஜ்ரிவால் ஏற்கனவே ஒரங்கட்டப்பட்ட பக்வந்த் மானை முதல்வர் முகமாக அறிவித்துள்ளார். பகவந்த் மானின் கோட்டை ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டது. உள்ளாட்சி தேர்தல்களில்  ஆம் ஆத்மி  கட்சி படுதோல்வி அடைந்தது. பக்வந்த் மானின் புகழ் அவரது சொந்த தொகுதியில் கூட இல்லை. எனவே பொதுமக்கள் ஏற்கனவே பகவந்த் மானை நிராகரித்து விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.