“தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்க விரும்பவில்லை”- உச்சக்கட்ட கோபத்தில் ராகுல்காந்தி

 
ராகுல்காந்தி திருமணம் செய்துகொள்ளாதது ஏன் தெரியுமா?? - அவரே சொன்ன பதில்..

சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கேட்டு டெல்லிக்கு முகாம் இட்டு உள்ள தமிழக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க ராகுல் காந்தி மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி

ஐதராபாத்தில் தவெக முக்கிய புள்ளியான விஷ்வரெட்டி என்பவரை காங். எம்.பி. மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 13 பேர், திமுகவுடன் இருந்தால்தான் வெற்றி சாத்தியம் எனக்கூறி, தவெக பக்கம் சென்றால் கட்சியை விட்டே வெளியேறுவோம் என தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மல்லிகார்ஜூனா கார்கே வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இன்று காலை சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கேட்டு டெல்லிக்கு முகாம் இட்டு உள்ள தமிழக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க ராகுல் காந்தி மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாருக்கும் நேரம் ஒதுக்க வேண்டாம் என தனது உதவியாளர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. திருநாவுக்கரசர் உள்ளிட்ட நிர்வாகிகள் ராகுல் காந்தியை சந்திக்க முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் சந்திப்பை தவிர்க்கிறார் ராகுல் காந்தி