அந்த நாய் விவகாரத்தால் ராகுல் டென்ஷன்! கார்த்தி சிதம்பரத்திற்கு கை கொடுக்காமல் விறுட்

 
k

எதிரே நின்று கை கொடுக்க வந்த கார்த்தி சிதம்பரத்தை கண்டு கொள்ளாமல் கடுப்பாக சென்றார் ராகுல் காந்தி.   ராகுலின் இந்த செயல் முகத்தில் அடித்தார் போல் இருந்ததால் வெகு நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் ராகுல் போன திசையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார் கார்த்தி சிதம்பரம். 

காங்கிரஸில் தீவிர பிரச்சனைகள் நடந்த போதெல்லாம் சீரியல்கள் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்து காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தார் கார்த்தி சிதம்பரம் எம்பி. 

kc

 அண்மையில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவரின் எம்பி பதவி தகுதி நீக்கம்  செய்யப்பட்டதால் நாடு முழுவதும் உள்ள காங்கிரசார் கொதித்து கிடந்திருந்த நேரம் தனது சிவகங்கை மக்களவைத் தொகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் இருக்கிறது என்றும்,  அதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்பி. 

 அந்த கடிதம் தனக்கு கிடைத்ததாக பதில் போட்டு இருக்கிறார் மோடி.   இதற்கு ட்விட்டர் பக்கத்தில் நன்றி  தெரிவித்தார் கார்த்திக் சிதம்பரம்.  காங்கிரஸின் மூத்த பிரமுகருக்கு சிறை  தண்டனை என்பதால்  காங்கிரசார் போராட்டம்,  ஆர்ப்பாட்டங்கள் என்று கொந்தளித்து இருந்த நிலையில்,  நாய்கள் விவகாரத்தில் அக்கறை காட்டி,  அதுவும் பிரதமர் மோடிக்கு நன்றி சொன்னது காங்கிரசாரிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 அது ராகுல் காந்திக்கு மட்டும் ஆத்திரத்தை ஏற்படுத்தாதா என்ன? அதுதான் இன்று எதிரொலித்திருக்கிறது.   இன்று காலையில் பாராளுமன்றத்திற்கு சென்றார் ராகுல் காந்தி.   அப்போது பாராளுமன்ற வாசலில் சிலர் நின்று அவருக்கு கை கொடுத்தார்கள்.   அங்கே  ராகுல் காந்தியின் வருகை எதிர்பார்த்து எதிரே நின்று அவருக்கு அவருக்கு கை கொடுக்க நின்றிருந்தார் கார்த்தி சிதம்பரம் . ஆனால் அவர் நிற்பதை அறிந்து கொண்டு அவர் முகத்தைக் கூட திரும்பிப் பார்க்காமல் அவருக்கு கை கொடுக்காமல் விறு விறு என்று சென்றுவிட்டார் . 

இதை கொஞ்சவும் எதிர்பார்க்காத கார்த்தி சிதம்பத்திற்கு முகத்தில் அடித்தார் போல் ஆகிவிட்டது.   படியை விட்டு கீழே இறங்கிய கார்த்தி சிதம்பரம் திரும்பி நின்று ராகுல் காந்தி போன திசையை விரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.   இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.