“தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை”

 

“தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை”

தமிழக தேர்தலில் மாநில தலைவர்களை விட தேசியக் கட்சிகளின் தலைவர்களே அதிகமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பாஜகவிலிருந்து மோடி, அமித் ஷா என்றால் காங்கிரஸிலிருந்து ராகுல் காந்தி ஒன்மேன் ஷோ காட்டிக் கொண்டிருக்கிறார். பாஜக மேடையில் வாய்ப்பேச்சு பேசிக்கொண்டிருக்கும் வேளையில் ராகுல் காந்தி எந்த இடத்திற்குப் பிரச்சாரம் செய்கிறாரோ அந்த இடத்தின் கேரக்டராகவே மாறிவிடுகிறார். அதேபோல மாணவிகளுடன் தண்டால், மீனவர்களுடன் மீன் பிடிப்பது, நீந்துவது என கலகலப்பாகப் பிரச்சாரம் செய்கிறார்.

“தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை”

இச்சூழலில் தமிழகத்தில் ராகுல் காந்தி பரப்புரை செய்ய தடை விதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு பாஜக மாநில தலைவர் எல். முருகன் கடிதம் எழுதியுள்ளார். அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அக்கடிதத்த்தில் வலியுறுத்தியிருக்கிறார். தேர்தல் விதிகளை மீறியதாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.