மக்களின் வலி மற்றும் இழப்பு என்று வரும்போது, மத்திய அரசு தூங்குகிறது... ராகுல் காந்தி தாக்கு
மக்களின் வலி மற்றும் இழப்பு என்று வரும்போது, மத்திய அரசு தூங்குகிறது என்று மோடி அரசை ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.
உண்மையான கோவிட்-19 இறப்பு புள்ளிவிவரங்களை வெளியிடவும், இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில், மக்களின் வலி மற்றும் இழப்பு என்று வரும்போது, மத்திய அரசு தூங்குகிறது. அவர்களை எழுப்புவோம்! கோவிட் நீதித்காக பேசுவோம் என்று பதிவு செய்து இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாகே சைலஜாநாத் கூறுகையில், தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை அரசாங்கம், தயவு செய்து நம் நாட்டில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை சொல்லுங்கள். தயவு செய்து எங்கள் மக்களுக்கு, நாட்டுக்கு உண்மையை சொல்லுங்கள் என்று தெரிவித்தார்.

அதேவேளையில், அரசாங்க வழிகாட்டுதல்கள் நடைமுறை வருவதற்கு முன்பே வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் இறப்புகளை குறிக்கும் இறப்பு சான்றிதழ்கள் அல்லது மாவட்ட குழுக்களால் அங்கீகரிக்கப்பட்டவை கோவிட்-19 காரணமாக ஏற்படும் மரணத்தை கருத்தில் கொள்வதற்கான சரியான ஆவணமாக கருதப்படும் என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.


