விவசாயிகளை கொன்ற மத்திய அமைச்சரின் பதவியை ராஜினாமா செய்து தண்டிக்க வேண்டும்.. ராகுல்காந்தி வலியுறுத்தல்

 
ராகுல் காந்தி ராகுல் காந்தி

விவசாயிகளை கொன்ற அமைச்சரின் பதவியை ராஜினாமா செய்து தண்டிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.


உத்தர பிரதேசம் லக்கீம்பூர் கெரி மாவட்டத்தில் அக்டோபர் 3ம் தேதியன்று மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் 4 விவசாயிகள்  உள்பட மொத்தம் 8 பேர் பலியாகினர். லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவத்தில் உத்தர பிரதேச மற்றும் மத்திய அரசுகளை எதிர்க் கட்சிகள் கடுமையாக தாக்கின.

லக்கிம்பூர் வன்முறை சம்பவம்

இந்த சம்பவத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், சிறப்பு புலனாய்வு குழு, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் ஆஷிஷ் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 13  பேரை கைது செய்ய கோரியது. இதனையடுத்து   லக்கிம்பூர் கெரி சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அஜய் மிஸ்ரா டெனி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பேசுகையில், லக்கிம்பூர் கெரியில் நடந்த கொலையை பற்றி பேச அனுமதிக்க வேண்டும், அங்கு அமைச்சரின் தலையீடு இருந்தது மற்றும் அது (கொலைகள்) ஒரு சதி என்று கூறப்படுகிறது. விவசாயிகளை கொன்ற அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தண்டிக்க வேண்டும் என்று  தெரிவித்தார்.