சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பஞ்சாப் அரசு மறுக்கவில்லை… பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த ராகுல்

 

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பஞ்சாப் அரசு மறுக்கவில்லை… பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த ராகுல்

உத்தர பிரதேச அரசு போலல்லாமல், பஞ்சாப், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுகள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மறுக்கவில்லை என பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் மரணம் அடைந்தார். இந்த விவகாரத்தை காங்கிரஸ் பெரிய அளவில் பிரச்சினையாக்கியது. மேலும் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில் ஹோஷியார்புர் என்ற ஊரில் பீகாரை சேர்ந்த புலம்பெயர்ந்த தலித் தொழிலாளியின் 6 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு எரித்து கொலை செய்யப்பட்டாள். அந்த சிறுமியின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பஞ்சாப் அரசு மறுக்கவில்லை… பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த ராகுல்
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

பஞ்சாபில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்த விவகாரத்தை பா.ஜ.க. கையிலெடுத்து ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளது. அரசியல் ரீதியாக தங்களுக்கு உதவக்கூடிய மற்ற எல்லா இடங்களுக்கும் செல்லும் சகோதாரர் மற்றும் சகோதரியின் மனசாட்சியை அது (பஞ்சாப் சிறுமி பாலியல் பலாத்காரம்) அசைக்காது. பஞ்சாப் சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி ஒரு டிவிட் கூட செய்யவில்லை. தாங்கள் ஆட்சி இல்லாத மாநிலங்களில் மட்டுமே அவர்கள் சீற்றம் காட்டுவார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது என்று ராகுல் காந்தியையும், காங்கிரசையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பஞ்சாப் அரசு மறுக்கவில்லை… பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த ராகுல்
நிர்மலா சீதாராமன்

பா.ஜ.க.வின் இந்த குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்த பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், உத்தர பிரதேசத்தை போலல்லாமல், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மறுக்கவில்லை, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை அச்சுறுத்தி மற்றும் நீதிக்கான பாதையை தடுக்கவில்லை. அதனை அவர்கள் செய்தால், நீதிக்காக போராட நான் அங்கு செல்வேன் என பதிவு செய்து இருந்தார்.