புல்லட் புரூப் அல்லாத டிரக்குகளில் அனுப்பப்படும் ராணுவத்தினர்… மோடிக்கு ரூ.8,400 கோடியில் விமானம்.. ராகுல் காந்தி

புல்லட் புரூப் அல்லாத டிரக்குகளில் அனுப்பப்படும் ராணுவத்தினர்… மோடிக்கு ரூ.8,400 கோடியில் விமானம்.. ராகுல் காந்தி

புல்லட் புரூப் அல்லாத டிரக்குகளில் ராணுவத்தினர் அனுப்பப்படுகின்றனர், மோடிக்கு ரூ.8,400 கோடி விமானம். இது நீதியா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் முக்கிய விவிஐபிக்கள் பயணம் செய்வதற்காக ரூ.8,400 கோடியில் அதிநவீன பாதுபாப்பு, பல்வேறு வசதிகள் கொண்ட 2 விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. முதலில் இந்த விமானங்கள் குறித்து எதுவும் விமர்சனம் செய்யாமல் இருந்து வந்தார் ராகுல் காந்தி. ஆனால் பஞ்சாபில் டிராக்டர் பேரணியின்போது அவர் டிராக்டரில் சோபாவில் அமர்ந்து வந்ததை பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்ததையடுத்து சொகுசு விமானம் குறித்து பேச தொடங்கி விட்டார்.

புல்லட் புரூப் அல்லாத டிரக்குகளில் அனுப்பப்படும் ராணுவத்தினர்… மோடிக்கு ரூ.8,400 கோடியில் விமானம்.. ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தற்போது ராகுல் காந்தி டிவிட்டரில், நமது ராணுவத்தினர் தியாகம் செய்ய புல்லட் புரூப் அல்லாத டிரக்குகளில் அனுப்பப்படுகிறார்கள். அதேசமயம் பிரதமருக்கு ரூ.8,400 கோடியில் விமானம். இது நீதியா? என பதிவு செய்து இருந்தார். மேலும் அதனுடன் ஒரு வீடியோவையும் பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில், டிரக்குகளில் ராணுவ வீரர்கள் செல்வதும், அதிலுள்ள 2 வீரர்கள், குண்டு துளைக்காத வாகனத்தில் நம்மை அனுப்புவது ஆபத்தானது என பேசுவது கேட்கிறது.

புல்லட் புரூப் அல்லாத டிரக்குகளில் அனுப்பப்படும் ராணுவத்தினர்… மோடிக்கு ரூ.8,400 கோடியில் விமானம்.. ராகுல் காந்தி
பிரதமர் மோடி

இதற்கு முன் கடந்த வாரம் பஞ்சாப் பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில், ஒரு புறம், பிரதமர் மோடி ரூ.8,400 கோடி மதிப்புள்ள 2 விமானங்களை வாங்கியுள்ளார். மறுபுறம், சீனா நமது எல்லையில் உள்ளது, நம் பாதுகாப்பு படையினர் நமது எல்லைகளை பாதுகாக்க கடுமையான குளிரை தாங்கி கொண்டிருக்கிறார்கள் என விமர்சனம் செய்து இருந்தார்.