மக்களின் வாழ்க்கையை காட்டிலும் பிரதமரின் ஈகோ பெரியது.. ராகுல் காந்தி தாக்கு

மக்களின் வாழ்க்கையை காட்டிலும் பிரதமரின் ஈகோ பெரியது.. ராகுல் காந்தி தாக்கு

ரூ.13,450 கோடியில் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டுவதை குறிப்பிட்டு, மக்களின் வாழ்க்கையை காட்டிலும் பிரதமரின் ஈகோ பெரியது என மோடியை ராகுல் காந்தி தாக்கினார்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ரூ.13,450 கோடி செலவில் புதிதாக நாடாளுமன்ற வளாகத்தை கட்டும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் வேளையில், புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் அவசியமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மக்களின் வாழ்க்கையை காட்டிலும் பிரதமரின் ஈகோ பெரியது.. ராகுல் காந்தி தாக்கு
புதிய நாடாளுமன்ற வளாக டிசைன்

இந்நிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு ரூ.13,450 கோடி செலவிடுவதற்கு பதிலாக தடுப்பூசி உள்ளிட்ட விஷயங்களில் பயனுள்ள வகையில் செலவழிக்கலாம் என மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களின் வாழ்க்கையை காட்டிலும் பிரதமரின் ஈகோ பெரியது.. ராகுல் காந்தி தாக்கு
கோவிட்-19 தடுப்பூசி

ராகுல் காந்தி டிவிட்டரில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு ரூ.13,450 கோடி செலவிடுவதற்கு பதிலாக 45 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் அல்லது 1 கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கலாம் அல்லது 2 கோடி குடும்பங்களுக்கு நியாய் திட்டத்தின்கீழ் ரூ.6 ஆயிரம் வழங்கலாம். ஆனால் மக்களின் வாழ்க்கையை காட்டிலும் பிரதமரின் ஈகோ பெரியது என பதிவு செய்து இருந்தார்.