தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி… பா.ஜ.க.வின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதம்தான் காரணம்.. ராகுல்

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி… பா.ஜ.க.வின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதம்தான் காரணம்.. ராகுல்

இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி கண்டதற்கு பா.ஜ.க.வின் வெறுப்பு நிறைந்த கலாச்சரா தேசியவாதம்தான் காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பன்னாட்டு நிதியம் உலக பொருளாதார பார்வை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியா மற்றும் வங்க தேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பீட்டு செய்துள்ளது. 2020ம் ஆண்டில் இந்தியா மற்றும் வங்க தேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருக்கும் என மதிப்பீடு செய்துள்ளது. இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,888 அமெரிக்க டாலராகவும், வங்க தேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,876.50 அமெரிக்க டாலராகவும் இருக்கும் என கணித்துள்ளது.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி… பா.ஜ.க.வின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதம்தான் காரணம்.. ராகுல்
பன்னாட்டு நிதியத்தின் கிராப்

பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தாக்கி வரும் ராகுல் காந்தி, பன்னாட்டு நிதியத்தின் தற்போதைய தகவலையும் குறிப்பிட்டு மோடி அரசை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், பா.ஜ.க.வின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டுகளின் உறுதியான சாதனை. வங்கதேசம் இந்தியாவை முந்தும் என பதிவு செய்து இருந்தார்.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி… பா.ஜ.க.வின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதம்தான் காரணம்.. ராகுல்
பா.ஜ.க.

மேலும் அதனுடன் பன்னாட்டு நிதியத்தின் வங்க தேசம், இந்தியா மற்றும் நேபாளத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான கிராப்பையும் பதிவேற்றம் செய்து இருந்தார். இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவுக்கு பா.ஜ.க.வின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதம்தான் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.