இந்துத்துவவாதிகளுக்கு அதிகாரம் மட்டுமே வேண்டும், அவர்கள் 2014 முதல் ஆட்சியில் உள்ளனர்.. ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி ராகுல் காந்தி

இந்துத்துவவாதிகளுக்கு அதிகாரம் மட்டுமே வேண்டும். அவர்கள் 2014 முதல் ஆட்சியில் உள்ளனர் என்று ராகுல் காந்தி பா.ஜ.க.வை தாக்கினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பணவீக்கத்தை அகற்று என்ற பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அதில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்துத்துவவாதிகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அதிகாரத்தை தேடி செலவிடுகிறார்கள். அவர்கள் அதிகாரத்தை தவிர வேறு எதையும் விரும்பவில்லை. அதற்காக எதையும் செய்ய முடியும். அவர்கள் சத்யாகிரகம் (உண்மை தேடல்) அல்ல, சத்யாகிரா (அதிகார தேடல்) வழியை பின்பற்றுகிறார்கள். இந்த நாடு இந்துக்களின் நாடு, இந்துத்துவவாதிகளின் நாடு அல்ல.

பா.ஜ.க.

இந்துத்துவவாதிகளுக்கு அதிகாரம் மட்டுமே வேண்டும். அவர்கள் 2014 முதல் ஆட்சியில் உள்ளனர். இந்த இந்துத்துவவாதிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்து விட்டு இந்துக்களை மீண்டும் கொண்டு வர வேண்டும். யார் இந்து? எல்லோரையும் அரவணைப்பவன் யாருக்கும் அஞ்சுவதில்லை, எல்லா மதத்தையும் மதிக்கிறான். அதேசமயம் ஒரு இந்துத்துவவாதி அவனுடைய பயத்தின் முன் தலைவணங்குகிறான்.

காந்தி

இந்திய அரசியலில் இன்று இரண்டு உலகங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்து மற்றும் இந்துத்துவவாதி இரண்டு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. நான் இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல. மகாத்மா காந்தி இந்து ஆனால் கோட்சே இந்துத்துவவாதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.