சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் எந்த தவறும் செய்யவில்லை.. ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை 12 எம்.பி.க்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவையின் 12 எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் இந்திய மக்களின் குரல் நசுக்கப்பட்டதன் அடையாளமாகும். அவர்களின் குரல்கள் நசுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. 

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகள் குிறத்து விவாதிக்க எங்களுக்கு அனுமதி இல்லை. மசோதாவுக்கு பின் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் நிறைவேற்றப்படுகின்றன. இது நாடாளுமன்றத்தையும் ஜனநாயகத்தையும் நடத்துவதற்கான வழி அல்ல. பிரதமர் மோடி அவைக்கு வருவதில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையும் எழுப்ப எங்களுக்கு அனுமதி இல்லை. இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை. சீனாவின் லக்கிம்பூர் கெரி, விவசாயிகள் பிரச்சினை பற்றி எந்த விவாதமும் இல்லை. இதன் அர்த்தம் என்ன? இது (நாடாளுமன்றம்) இப்போது ஒரு கட்டிடம், ஒரு அருங்காட்சியகம். 

நாடாளுமன்றம்

ஒரு அமைச்சர் விவசாயிகளை கொன்றார். இது பிரதமருக்கு தெரியும். உண்மை என்னவெனில், 2-3 முதலாளிகள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள். இந்த எம்.பி.க்கள் (இடைநீக்கம் செய்ய 12 எம்.பி.க்கள்) மாநிலங்களவை தலைவர் அல்லது பிரதமரால் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்ல. மாறாக விவசாயிகளின் வருமானத்தை திருட நினைக்கும் சக்திகளால் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள். பிரதமரும், மாநிலங்களவை தலைவரும் அதனை நடைமுறைப்படுத்துபவர்கள் மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.