மத்திய அரசின் தவறான முடிவுகள் 50 லட்சம் பேரை கொன்றது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய அரசின் தவறான முடிவுகள் 50 லட்சம் பேரை கொன்றது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின்போது மத்திய அரசின் தவறால் முடிவுகளால் 50 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது முதல் இதுவரை கொரோனாவால் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் பலி எண்ணிக்கை அதனை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் அடிக்கடி கூறி வந்தது. மேலும் கொரோனா பலி எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டியது.

மத்திய அரசின் தவறான முடிவுகள் 50 லட்சம் பேரை கொன்றது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கொரோனாவால் இறந்தவரின் உடல் அடக்கம்

இந்த சூழ்நிலையில், ஒரு லாபநோக்கமற்ற சர்வதேச திட்ட குழுவான உலகாளவிய மேம்பாட்டு மையம் இந்தியாவில் கோவிட் இறப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி, கொரோனா வைரஸின் 2வது அலையின்போது மத்திய அரசின் தவறான முடிவால் 50 லட்சம் பேர் இறந்தனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் தவறான முடிவுகள் 50 லட்சம் பேரை கொன்றது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உலகளாளவி மேம்பாட்டு மையம்

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், உலகளாளவி மேம்பாட்டு மையத்தின் அறிக்கையை பதிவேற்றம் செய்தததுடன், உண்மை. கோவிட் இரண்டாவது அலையின்போது மத்திய அரசின் தவறான முடிவுகள், எங்கள் சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள் மற்றும் தந்தையர்களில் 50 லட்சம் பேரை கொன்றன என்று பதிவு செய்துள்ளார்.