உன்னாவ் சிறுமியின் தாயார் தேர்தலில் போட்டி.. போராடுவாள், வெல்வாள்.. ராகுல் காந்தி வாழ்த்து

 
ராகுல் காந்தி

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 125 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் உன்னாவ் சிறுமியின் தாயார் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவருக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங் காந்தி நேற்று வெளியிட்டார். 

பிரியங்கா காந்தி

125 பேர் கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில், 2019ல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது,  ஆண் காவலரால் வயிற்றில் உதைக்கப்பட்ட நடிகையும், சமூக ஆர்வலருமான சதாப் ஜாபர் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் சிறுமியின் தாயார் ஆஷா சிங் பெயரும இடம் பெற்றுள்ளது. உன்னாவ் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

காங்கிரஸ்

உன்னாவ் சிறுமியின் தாயார் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில், உன்னாவில் பா.ஜ.க.வால் அநீதி இழைக்கப்பட்ட தன் மகளுக்கு இப்போது நீதியின் முகமாக மாறுவார். போராடுவாள், வெல்வாள் என்று பதிவு செய்து இருந்தார். லக்னோ (மத்திய) சட்டப்பேரவை தொகுதியில் சதாப் ஜாபர்  காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்குகிறார்.