பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியல் நாட்டுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.. ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியல் நாட்டுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட்டரில் தன்னை பின்தொடருபவர்களிடம் பா.ஜ.க.வின் மிகப்பெரிய குறைபாடு குறித்து கருத்து கணிப்பு ஒன்றை நடத்தினார். பா.ஜ.க.வின் குறைபாட்டை தேர்வு செய்வதற்காக நான்கு விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார்.
வேலையின்மை
வரி கொள்ளை
பணவீக்கம்
வெறுப்பு சூழல் ஆகிய 4 தேர்வுகளை வழங்கி இருந்தார். 

வெறுப்பு பேச்சு

இந்த கருத்து கணிப்பில் மொத்தம் 3.47 லட்சம் பேர் பங்கேற்றனர். கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் அதிகபட்சமாக 35 சதவீதம் பேர் வெறுப்பு சூழல்தான் மத்திய அரசின் மிகப்பெரிய தோல்வியாகும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்து வேலையின்மை அதிகபட்சமாக 28 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 19.28 சதவீதம் பணவீக்கத்தையும், 17.2 சதவீதம் பேர் வரி விதிப்பையும் குறிப்பிட்டுள்ளனர்.

பா.ஜ.க.

ராகுல் காந்தி டிவிட்டரில், பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியல் நாட்டுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும், இந்த வெறுப்பு வேலையில்லா திண்டாட்டத்திற்கும் காரணம். சமூக அமைதி இல்லாமல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்கள் இயங்க முடியாது. தினமும் உன்னை சுற்றி வளரும் இந்த வெறுப்பை சகோதரத்துவத்தால் முறியடிப்பாயா- நீ என்னுடன் இருக்கிறாயா? என்று பதிவு செய்து இருந்தார்.