பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பஞ்சாபில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முழு பலத்துடன் போட்டியிடும். பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக வேறொருவரை நியமித்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முடியும் என்றால் அது செய்யப்பட வேண்டும். நான் நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்ப நாள் முதலே சொல்வி வருகிறேன்.

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்
சுனில் ஜாகர்

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாரை காங்கிரஸ் கட்சியின் முகமாக முன்னிறுத்துவது குறித்து எனது கருத்தை கமிட்டி முன் வைத்திருக்கிறேன். கட்சியில் ஒரே ஒரு கேப்டன் மட்டுமே இருக்கிறார் என்பது தெளிவாகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் எங்களது வலியான மற்றும் பெரிய நபர் . அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் அவரை கட்சியின் முகமாக முன்னிறுத்துவதா இல்லையா என்பது குறித்து மட்டுமே எங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

ஆனால் இறுதி முடிவு காங்கிரஸ் உயர் கட்டளை மற்றும் சோனியா காந்தியால் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக நவ்ஜோத் சிங் சித்து உள்பட பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்து வரும் வேளையில், சுனில் ஜாகர் அமரீந்தர் சிங்குக்கு ஆதரவாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.