”ஈபிஎஸ்-க்கு எவ்வளவுதான் ஆசைப்படுவது..? ஓபிஎஸ்-ஐ பதவியிலிருந்து எடுக்க வேண்டுமென நினைக்கிறார்”

 
eps

பதவியை பலமுறை விட்டுக்கொடுத்து கட்சியை காப்பாற்றிய ஓ.பன்னீர் செல்வத்தை தற்போது  பதவியிலிருந்து நீக்க வேண்டுமென நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

tn

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தை  சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, “ நான் கட்சியில் மீண்டும் இணைய வேண்டுமென்று ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசவில்லை. அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையிலேயே சந்தித்துப் பேசினேன். நீண்ட இடைவெளிக்கு பின்னால் கட்சியில் இருந்து என்னை நீக்கிய பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்தேன். வேதனை உடன் சொல்கிறேன், எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகளால் கட்சி சின்னா பின்னம் ஆகி கொண்டு இருக்கிறது. பெருந்தன்மையுடன் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்து, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக அறிவித்தார் ஒ.பன்னீர்செல்வம்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஆவது விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டோம் அதையும் விட்டுக்கொடுக்காமல் அரசியலில் ஒரு சர்வாதிகாரியாக திகழ்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியை காப்பாற்ற மட்டுமே பன்னீர்செல்வம் வேண்டும். பலமுறை விட்டுக்கொடுத்து கட்சியை காப்பாற்றிய ஓ.பன்னீர் செல்வத்தை தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடுக்க வேண்டுமென நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நான்கு வருடமாக ஆட்சியில் இருந்தபோது அமைச்சர்களை கொள்ளையடிக்க அனுமதித்தது எடப்பாடி பழனிசாமி அதனால் தான் பழனிசாமி வாழ்க என்று கோஷங்கள் எழுப்புகிறார்கள். கொள்ளைக் கூட்டத்தின் தலைவராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

tn

எடப்பாடி உனக்கு துணிச்சல் , தைரியமருந்தால் கிராமந்தோறும் பெட்டி வைத்து, கட்சிப் பதவிக்கு தேர்தல் நடத்து. கிராமங்களில் ஜெயித்து காட்டு . பழனிசாமியால் சொந்த ஊரில் பஞ்சாயத்தில் கூட ஜெயிக்க முடியவில்லை. இரட்டை இலை இல்லாமல் தனியாக நின்றால் 500 வாக்கு கூட பழனிசாமியால் வாங்க முடியாது. திமுகவிற்கு எதிராக 1 வருசமா பேசுவதற்கு எதிர்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிக்கு தைரியமிருந்ததா..? அதனால்தான் அண்ணாமலை இன்று எதிர்கட்சி தலைவர் என்று சொல்லிக் கொள்கிறார். எடப்பாடி மாதிரியான முட்டாள்களை எல்லாம் பிரதமர் நரேந்திர மோடி வழி நடத்த மாட்டார். கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியேற்றப்படுவார்.  

இரட்டை தலைமை, இரட்டை கோபுரம். இரட்டை பயில்வான் என ஜெயக்குமார் தான் சொன்னார். தற்போது ஒற்றை  தலைமை வேண்டும் என ஏன் கேட்கிறார்கள்? எடப்பாடி பழனிசாமி எவ்வளவுதான் ஆசைப்படுவது, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வத்தை தான் தலைமைச் செயலகத்தில் தொட்டதற்கெல்லாம் அழைப்பார். எடப்பாடி பழனிசாமியை ஒரு முறை இரண்டு முறை தான் அழைத்து பேசி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுத்தது தான் சசிகலா செய்த மிகப்பெரிய தவறு. ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் பொதுக்குழு கூட்டம் நடத்த முடியாது. எனவே பொதுக்குழு நடக்குமா நடக்காதா என்ற முடிவு செய்ய வேண்டியவர் ஓபிஎஸ் தான். பொதுக்குழுவில் சட்டரீதியாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.