ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு டெல்லியில் உள்ள கதவுகள் மூடப்பட்டுவிட்டன- புகழேந்தி
அதிமுகவின் தலைமைக்கு எதிராக அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் குறித்து கட்சியின் முன்னாள் நிர்வாகி ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக அதிருப்தி நிர்வாகிகள் புகழேந்தி,அன்வர் ராஜா,ஓ.பி.ராஜா உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “ அழிவு பாதையை நோக்கி செல்லும் அதிமுகவை பாதுகாக்க அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். சசிகலாவை ஒன்றிணைத்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும். தற்போது தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசுகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து மாநாடு போல் நிகழ்ச்சி நடத்துவதற்கு முடிவு செய்து வருகிறோம்.
சசிகலா வரவேண்டும் என தீர்மானம் போட்டவர்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை? ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் தங்களுக்கு ஆதாயம் தேடி கொள்ள சசிகலாவை ஆயுதமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். ஜெயக்குமார் ஜெயிலுக்கு சென்று வருவதை நியாப்படுத்தி பேசுகிறார். அப்படி பார்த்தால் ஜெயகுமாருக்கு ஒரு நியாயம் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு நியாயமா? டெல்லியில் உள்ள கதவுகள் பழனிசாமிக்கும் மற்றவர்களுக்கும் மூடப்பட்டு விட்டது. இனி பாஜக அவர்களை சேர்க்க மாட்டார்கள்” எனக் கூறினார்.