“எல்லாத்துக்கும் காரணம் சசிகலா செய்த தவறுதான்; அதை அவரே என்னிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்”

 
புகழேந்தி அதிமுக

எடப்பாடி மன்னன் மகுடம் சூட்ட முடியாது, ஐந்தரை அறிவு உள்ள எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

v.pugazhendhi, அதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி நியமனம் -  pugazhendhi appointed as aiadmk spokesperson - Samayam Tamil

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், அவரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் வி. கே. சசிகலா தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்ததுதான் இப்போதைய அரசியல் மாற்றத்திற்கு காரணம், அவர் இதை பலமுறை தன்னிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார், எடப்பாடி பழனிச்சாமி ஜெயிலுக்கு போவது உறுதி அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வார்கள், அதற்குக் காரணம் இந்தியாவில் நடைபெற்ற ஊழலுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் நடைபெற்றுள்ளது.

துரோகத்தின் உச்சம் அடைந்த எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்கள் எடப்பாடிக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விஷயம் செய்தித் தாள்களில் கசிவு குறித்து கேட்டபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி தான் அவர் மற்றும் தற்போதைய டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் கைது செய்யப்பட வேண்டும் இதுபோன்று கொடநாடு வழக்கு, ஊழல் வழக்கு அனைத்து விஷயமும் கசிய தான் செய்யும்.  இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முறையாக நடவடிக்கை எடுக்கும் பொழுது எடப்பாடி உள்ளிட்ட அனைவரும் ஜெயிலுக்கு செல்வது உறுதி என்று கூறினார். ஓபிஎஸ் தலைமையில் அனைவரும் ஒன்றாக இணைந்து கட்சியை வழிநடத்த தமிழகம்  முழுவதும் உள்ள அனைத்து அண்ணா திமுகவினரும் ஒன்றிணைய வேண்டும் என்று  ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.