மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?- புகழேந்தி

 

மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?- புகழேந்தி

மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?- புகழேந்தி

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, “பாலியல் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகையை முதலில் தெரியாது பணம் பறிக்கும் கும்பல் என கூறினார், அதன்பிறகு 5 லட்சம் பணம் கொடுத்திருப்பதாக தெரிவித்தார். அதன்பிறகு அப்பார்ட் மெண்ட்டில் தன்னுடன் வாடகைக்கு குடியிருந்ததாக கூறினார். இவ்வளவு காரியங்களை செய்த மணிகண்டன் இன்னும் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. அவரை கட்சியில் இருந்து நீக்காதது ஏன்? ஜெயலலிதா இருந்திருந்தால் ஒரே நொடியில் தூக்கி எறிந்திருப்பார். இவர்கள் ஏன் மணிகண்டனுக்கு துணை போகிறார்கள் என்பது விசாரணையிலேயே தெரியவரும்.

2019 ஆம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டது ஏன்? அந்த நடிகை மணிகண்டனை மட்டுமல்லாது மேலும் சில அமைச்சர்களையும் சந்தித்துள்ளார். 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும். மணிகண்டன் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால் நீதிபதி பாலியல் வன்கொடுமை பிரிவை நீக்கு எனக்கூறுவது வழக்கு சரியான பாதையில்தான் செல்கிறதா என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.