எடப்பாடி காலில் எம்ஜிஆர் விழுவதா? புகழேந்தி ஆவேசம்

 
எடப்பாடி பழனிசாமி

அதிமுகவுக்கு ஓட்டு செலுத்தினால் பாஜகதான் தமிழகத்தை ஆளும் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி- முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து  நீக்கம் || ADMK spokesperson Pugazhendhi and- key executives expelled from  party

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் சென்னையில் செய்தியாளார்களிடம் பேசிய அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்காக பிரச்சாரத்தில் இருக்கும்பொழுது எம்ஜிஆர் வேடமிட்டவர், எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்துள்ளார், இதை அங்கிருக்கும் அமைச்சர்களும் யாரும் தடுக்கவில்லை இந்த செயல் கண்டனத்துக்குரியது. எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆரை பார்த்திருக்க மாட்டார், எம்ஜிஆர் காலில் விழுந்திருக்க மாட்டார், அவர் சசிகலா காலில் விழுந்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வர வாய்ப்பு இல்லை. அமாவாசை சினிமாவில் பார்த்து ரசித்து இருக்கிறோம் அதற்கு பிறகு தற்போது பழனிச்சாமிக்கு பொருத்தமாக இருக்கும். 

திமுக மீது ஒரே ஒரு விமர்சனம் தான் மக்களுக்கு உண்டு, கொடநாடு கொலை வழக்கில் இன்னும் பழனிச்சாமி கைது செய்யாமல் இருப்பது ஏன்? இதைத் தவிர திமுகவை குறை சொல்ல எதுவும் இல்லை.  தமிழ்நாடு கூறுபோட்டு விற்ற கூட்டம்தான் பழனிச்சாமி கூட்டம்.  மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றார், அதே போல தான் திமுக தமிழ்நாட்டில் வெற்றி பெற, அதிமுக தான் இதற்கு முழு காரணம் .

பாஜக கூட்டணியில் இருந்து நாங்கள் வரமாட்டோம் என பழனிச்சாமி கூறுகிறார். இப்படி இருக்கையில் எப்படி மக்கள் அவருக்கு ஓட்டு அளிப்பார்கள். சென்னையில் உள்ள எந்த மாவட்ட செயலாளர்களும் பழனிச்சாமி பேச்சை கேட்பதில்லை.  எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வர கோடிக்கணக்கில் செலவு செய்தார், ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏன் அதிமுக வேட்பாளருக்கு செலவு செய்யவில்லை? ஏழு பேர் விடுதலையில் அதிமுக எத்தனை தடவை ஆளுநரை பார்த்தீங்க? நான்கு வருடங்களில் எடப்பாடி பழனிச்சாமி எந்த நன்மைகள் செய்தார் அவர் செய்த ஒரே நன்மை 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு மட்டுமே. அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான், மக்கள் அதிமுகவுக்கு வாக்கு அளித்தால் பாஜகவுக்கு போகும். திமுக கூட்டணி கொள்கை கோட்பாடுகளுடன் ஒன்றாக உள்ளனர்.  கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் சம்பவம் குறித்து பழனிசாமி எந்த ஒரு கண்டன அறிக்கையும் தரவில்லை. கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யவில்லை என்றால் என் தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்.