மாடு மேய்த்த எடப்பாடிக்கு புத்தி இருக்காது அதனால் ஒருமையில்தான் பேசுவார்- புகழேந்தி
ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக வின் முன்னாள் நிர்வாகியுமான புகழேந்தி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை திருடி சென்றதாக ஓபிஎஸ் மீது குற்றம் சாட்டி உள்ளனர் எடப்பாடி தரப்பினர் எப்பொழுதுமே தராதரம் குறைந்த அளவில் தான் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார். அதிமுக கட்சி அலுவலகத்தை சேதப்படுத்திய வழக்கில் ஓபிஎஸ் மீது போடப்பட்டுள்ள எஃப் ஐ ஆர் முதல்முறையாக போடப் பட்டது என கருதுகிறேன்.
கட்சி அலுவலகத்திலிருந்து திருடிவிட்டதாக ஓபிஎஸ் மீது குற்றம் சாட்டும் எடப்பாடி தரப்பினர் ஏற்கனவே அங்கு உள்ளவற்றை கொள்ளையடித்து விட்டனர். அரசு எங்களுக்கு சாதகமாக உள்ளது என்று குற்றம் சாட்டுகிறீர்களே, ஆர்பி உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகியை விரைந்து கைது செய்த காவல்துறை தேனியில் உள்ள ஓபிஎஸ் இன் வீட்டையே சூறையாடுவேன் அவரது வாழ்க்கையை முடித்து விடுவேன் என்று ஆர்.பி.உதய குமார் கூறியிருக்கிறார் அவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தலைமை அலுவலகத்தில் 200 அடியாட்களுக்கு சம்பளம் கொடுத்து ஒரு வாரம் தங்க வைத்துள்ளனர், எடப்பாடி தரப்பினர் இந்த வழக்கில் விசாரணை வருவது நல்லது தான். தமிழ்நாட்டை நான்கு முதலமைச்சர்கள் ஆளுகிறார்கள் என்று எடப்பாடி பொறுமையில் பேசியுள்ளார். அவர் மாடு மேய்த்தவருக்கு நல்ல புத்தி இருக்காது . ஆகவே அவர் ஒருமையில் தான் பேசுவார் ஆகவே முதலமைச்சர் ஆளுவது என்பது வேறு முதலமைச்சராக செயல்படுகிறார்கள் என்பது வேறு” எனக் கூறினார்.