“அதிமுகவில் பாலியல் பிரிவு ஏற்படுத்தலாம்; ஜெயக்குமாரை தலைவராக்கலாம்”
சேலத்தில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இன்று அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துகிறேன் என ஈபிஎஸ் அணி காமெடி செய்தது... கடந்த 21 ஆம் தேதி ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு போட்டியாக இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தவில்லையெனில் ஓபிஎஸ் பின்னாடி அனைவரும் சென்றுவிடுவர் என்ற அச்சத்தில் ஈபிஎஸ் கூட்டத்தை கூட்டியுள்ளனர். கட்சியில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மன்றம், வழக்கறிஞர் அணி, விவசாய அணி ஆகியவை இருப்பது போன்று கட்சியில் பாலியல் பிரிவு ஏற்படுத்தலாம். அதற்கு ஜெயக்குமார் தலைவராக இருக்கலாம்.
ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்-ஐ கண்டால் நடுங்குவார். சாலையில் பார்த்தலும், அழைத்தாலும் பழனிசாமி அஞ்சுவார். தற்போது பணம் வந்த திமிரு இவ்வாறு பேச வைக்கிறது. பொதுச்செயலாளர் பதவியை அடைய வேண்டும், கட்சியை அழிக்க வேண்டும் என்பதே பழனிசாமியின் நோக்கம். எடப்பாடி பழனிசாமி துரோகி. எடப்பாடி பழனிசாமியையும், கட்சியையும் காப்பாற்றியவர் ஓபிஎஸ். முதல்வர் வேட்பாளர் என பழனிசாமியை ஓபிஎஸ் அறிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் விட்டுக்கொடுத்தார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆதாரம் இருந்தும் எடப்பாடி பழனிசாமியை கைது செய்யாதது ஏன்? ஓபிஎஸ் தலைமையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் சேலத்தில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெறும் மாநாட்டில் ஓபிஎஸ் கலந்துகொண்டு உரையாற்றுவார்.கொலை குற்றத்தில் ஆரம்பித்த எடப்பாடி பழனிசாமி வரலாற்றை மீண்டும் அதே இடத்தில் போய் சேர்க்கும் வரை ஓயமாட்டோம், தூங்கமாட்டோம்.” எனக் கூறினார்.