எடப்பாடி பழனிசாமி தரப்பு பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்- புகழேந்தி

 
pugalendhi

கடந்த மாதம் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது.

pugazhendhi, ஸ்டாலினுக்கு ஆதரவாக புகழேந்தி: ராஜேந்திர பாலாஜிக்கு  அடுத்தடுத்து சிக்கல்! - former aiadmk spokesperson pugazhendhi has lodged a  complaint against rajendra balaji - Samayam Tamil

இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம். கடந்த 29 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும், அதுவரை இரு தரப்பினரின் நிலை பாடுகளும் முன்பு இருந்தது போலவே தொடர வேண்டும் என தெரிவித்து உத்தரவு பிறப்பித்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு புகழேந்தி, “உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்களுக்கு சாதகமாக வந்துள்ளதாக கூறி தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக இரண்டு வாரங்கள் என குறிப்பிட்டுள்ளது. அதுவரை கட்சியில் முன்பிருந்த நிலையே நீடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆகவே இதில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.


அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்பது தெளிவாகிறது. அண்மையில் தேர்தல் ஆணையத்தின் மூலம் அனைத்து கட்சி கூட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்புதழில் எந்த ஒரு தனி நபரின் பெயரையும் குறிப்பிடாமல் அதிமுக தலைமை  என்றுதான் அழைப்பை அனுப்பி இருக்கிறது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது எனக்கூறி தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது மிகவும் தவறானது” என தெரிவித்தார்.