அமித்ஷா மிரட்டல் எதிரொலி- புதுச்சேரி தே.ஜ.கூட்டணி தொகுதிப்பங்கீடு நிறைவு

 
ச்

அமித்ஷா மிரட்டல் எதிரொலி காரணமாக,  தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரம் முடிவுக்கு வந்தது.

புதுச்சேரியில் என்டிஏ அரசு ஆட்சியில் உள்ளது. என்ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார்.இக்கூட்டணியில் முதல்வர் நீடிப்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது. இச்சூழலில் கடந்த மாதம் காரைக்காலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தபோது முதல்வர் ரங்கசாமி சந்தித்து என்டிஏ கூட்டணியில் இருப்பதை உறுதி செய்தார். இச்சூழலில் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளராக உள்ளார். அவர் புதுச்சேரி வந்து முதல்வருடன் பேசினார். அப்போது என்டிஏ கூட்டணியில் என்ஆர்காங்கிரஸுக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 10 இடங்கள் மற்றும் கூட்டணி கட்சிகளான அதிமுகவுக்கு 2 , லஜகவுக்கு 2 இடங்கள் தரப்பட்டன.

இச்சூழலில் என்டிஏ அரசை விமர்சித்து வந்த லஜகவை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று முதல்வர் ரங்கசாமி வலியுறுத்த தொடங்கினார். இதையடுத்து பேச்சுவார்த்தையை அவர் தவிர்க்கவும் தொடங்கினார். அதைத்தொடர்ந்து பாஜக தலைவர்கள் டெல்லி சென்று கூட்டணியில் சூழல் தொடர்பாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நேற்று புதுச்சேரிக்கு தனி விமானத்தில் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா வந்தார். ஆனால், அதே நேரத்தில் முதல்வர் ரங்கசாமி மதுரை, திருச்செந்தூருக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் மேலிடத்திலிருந்து முதல்வர் ரங்கசாமியிடம் பேசினர். அதைத்தொடர்ந்து இன்று வேட்பு மனுவைத்தாக்கல் செய்து விட்டு பிற்பகலில் நட்சத்திர விடுதிக்கு வந்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார். அப்போது கூட்டணியில் என்ஆர்காங்கிரஸ் இருப்பது உறுதியானது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை உறுதிப்படுத்திய சூழலில் முத்தியால்பேட், லாஸ்பேட்டை தொகுதிகளில் என்ஆர்காங்கிரஸ் இம்முறை போட்டியிடுகிறது. அதே நேரத்தில் மாஹே, ராஜ்பவன் தொகுதிகளை பாஜகவுக்கு விட்டுத் தந்துள்ளது. மத்திய அமைச்சரை முதல்வர் ரங்கசாமி நட்சத்திர விடுதியில் சந்தித்ததை அடுத்து என்டிஏ கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் லட்சிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருக்க முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார்.