"ஆபிஸ்ல ஒத்த சேர் கூட இல்ல" - தரையில் அமர்ந்து பணிசெய்யும் திமுக எம்எல்ஏ!

 
திமுக எம்எல்ஏ சம்பத் திமுக எம்எல்ஏ சம்பத்

புதுச்சேரியிலுள்ள முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத். இவருக்கு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அறை என்றால் வெறும் அறை மட்டுமே. அந்த அறைக்குள் மேசை, நாற்காலி என எதுவுமே அமைத்து தரப்படவில்லை. உட்கார கூட சிறு நாற்காலி கொடுக்கவில்லை ஆளுங்கட்சி. இதனால் எம்எல்ஏ சம்பத் தனது பணிகளைத் தரையில் உட்கார்ந்தபடியே மேற்கொள்கிறார்.

திமுக எம்எல்ஏ சம்பத்

அதேபோல தொகுதி மக்களை தரையில் அமர்ந்தபடி தான் சந்தித்தும் வருகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளுங்கட்சி வேண்டுமென்றே வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சம்பத், "சட்டப்பேரவை வளாகத்தில் எனக்கு அலுவலகம் ஒதுக்கப்பட்டது. 40 ஆயிரம் பொதுமக்களை சந்திக்க வேண்டியுள்ளது. மக்களின் நலனுக்காக ஆளும் அரசை அதிகம் கேள்வி கேட்டதால் எனக்கு இந்த நிலை.

தொற்று பாதிப்புக்கு 8 நாள் சிகிச்சைக்குப் பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி  புதுச்சேரி திரும்பினார்; வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்||CM ...

என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக அறையில் மேசை, நாற்காலிகள் கூட அமைத்து தரவில்லை. நான் ஏழ்மை, எளிமை நிலையில் இருந்துதான் இந்த இடத்துக்கு வந்தேன். அதனால் நாற்காலி இல்லையென்றாலும் தரையில் அமர்ந்து மக்கள் பணி செய்ய முடியும். ஆனால் இந்த அவல நிலையை உருவாக்கிய என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு நியமன எம்எல்ஏக்களுக்கு விசாலமான அறை, சொகுசு நாற்காலிகள், சொகுசு கார்கள் வழங்க மட்டும் நிதி ஒதுக்குகிறது’’ என்றார்.