பிடிஆர் லீக்ஸ் - அடுத்த நிதியமைச்சர் இவரா?

 
ப்

பிடிஆர் லீக்ஸ் விவகாரத்தால் அடுத்த நிதி அமைச்சர் அவரா இவரா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.   ஆடியோ லீக் ஆனதால் தற்போதைய தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விரைவில் மாற்றப்படுவார் என்றே பரபரப்பு செய்திகள் பரவி வருகின்றன. அதே நேரம் அப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டால் அந்த ஆடியோ உண்மை என்றாகிவிடும், அந்த ஆடியோவில் பேசி இருப்பதும் உண்மையாகிவிடும்.  அதனால் இலாகா மாற்றத்திற்கு வாய்ப்பிருக்காது என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

ப்

 திமுக மூத்த தலைவர்களுக்கும் பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு அடிக்கடி உரசல் எழுந்து வந்திருக்கிறது.  இவையெல்லாம் தலைமை பொறுப்பில் இருக்கும் ஸ்டாலின் கடுமையாக கண்டித்து இருக்கிறார் என்ற செய்திகளும் அவ்வப்போது வெளிவந்தன.   பி டிஆர் பழனிவேல்ராஜனுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் கூட அவ்வப்போது உரசல்கள் இருந்து வந்து வந்தது என்றும் செய்திகள் வருகின்றன.  ஜக்கி வாசுதேவ் விவகாரம்,  உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானபோது அதிகார வரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட  தருணங்களில் பிடிஆர் சலசலப்புகளை ஏற்படுத்தி வந்திருக்கிறார்.

 இந்த நிலையில் திமுக வினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,  இதற்கு எதிராக திமுகவினர் அண்ணாமலைக்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கும் நிலையில் , பிடிஆரின் ஆடியோ ஒன்று வெளியாகி திமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ச

 டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவருடன் பிடிஆர் ஆங்கிலத்தில் பேசுவதாக ஒரு குரல் பதிவு கடந்த இரண்டு தினங்களாக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  பி டி ஆர் லீக்ஸ் என்கிற தலைப்பில் முதல்வரின் மகன் உதயநிதி மருமகன் சபரீசன் ஆகியோர் பல்லாயிரம் கோடிகளில் சொத்து சேர்த்திருப்பதாக பேசி இருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதியும்,  மருமகன் சபரீசனும் ஒரு ஆண்டில் தங்கள் வருமானத்தை விட அதிக பணம் ஈட்டி உள்ளார்கள்.  இப்போது அது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.  இந்த பிரச்சனையை எப்படி கையாளுவது எப்படி கணக்கு காட்டுவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர் என்று அமைதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசியுள்ள ஆடியோ பதிவு வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உ

 முதல்வர் மருமகன் சபரீசன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு உறவினர் என்று சொல்லப்படுகிறது.  அப்படி இருக்கும் போது அவரைப் பற்றி பிடிஆர் இப்படி பேசி இருப்பாரா? அப்படியே பேசியிருந்தாலும் அந்த உரையாடலின் ஆரம்பம் என்ன? முடிவு என்ன? அதெல்லாம் அந்த ஆடியோவில் இல்லையே என்ற சந்தேகமும் திமுகவினர் வட்டாரத்தில் இருந்து வருகிறது.

இந்த ஆடியோ சித்தரிக்கப்பட்டது என்றும் திமுகவினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.  இது அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய ஆட்சியாளர்கள் குறித்து பிடி ஆர் பேசியதை வெட்டி ஒட்டி பரப்பி வருகிறார்கள் என்றும் திமுகவினர் சமாளித்து வருகின்றனர்.  ஆனாலும் இது எப்போது பேசியது யார் பேசியது என்பதெல்லாம் திமுக தலைமைக்கு தெரியாமல் இருக்காது.  அதனால் பிடிஆர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் அவருக்கு முக்கியமில்லாத நிதியமைச்சர் ஆக இருக்கும் பி டி ஆர் முக்கியமில்லாத துறைக்கு மாற்றப்படுவார் என்று கட்சிக்குள் பேச்சு எழுந்திருக்கிறது.   அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் பிடியார் பேசியதாக பரவும் ஆடியோ உண்மை என்று ஆகிவிடும்.  முதல்வர் பிடிஆர் மீது நடவடிக்கை எடுத்தால் பிடிஆர் பேசியதும் உண்மை என்பது ஒன்று ஆகிவிடும் . அதனால் பிடிஆர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகின்றனர் .  

செ

அதே நேரம் இலாகா மாற்றம் உறுதி என்றும்,  அடுத்த நிதி அமைச்சர் அவரா இவரா என்றும் அடுத்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவா? செந்தில் பாலாஜியா? என்றும் ஆளுங்கட்சியினரிடையே பரபரப்பு தகவல் பரவி வருகிறது.