நாக்கை அறுப்பேன்னு சொன்னவருக்கு பாதுகாப்பு;நாக்கு சொன்னதை பதிவு செஞ்சவருக்கு சிறையா? அதிமுக ஆவேசம்
நீதிபதி நாக்கை அறுப்பேன்னு சொன்னவருக்கு பாதுகாப்பு;துரைமுருகன் சொன்னதை பதிவு செஞ்சவருக்கு சிறையா? என்று கேட்கிறார் நிர்மல்குமார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இவர் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய போது, என் மரணத்திற்கு பிறகு புதை குழியில் இங்கே கோபாலபுரத்து விசுவாசி உறங்குகிறான் என்று எழுதினால் போதும் என உருக்கமாக சொன்னார்.
இதைத்தான் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை ஒரு கல்லறையில் இருப்பது போல் சித்தரித்து, கோபாலபுரத்து கொத்தடிமை இங்கே உறங்குகிறான் என்று வாசகங்களை எழுதி , அதனுடன் துரைமுருகன் அதைச் சொல்வது போல் ஆடியோவை இணைத்து , அதை வீடியோவாக தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருந்தார் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொள்ளாச்சி இருபதாவது அணி செயலாளர் அருண்குமார். அவரை காட்பாடி போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலாறில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி மோடி பெயர் குறித்து பேசியது சர்ச்சையானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் ராகுலின் பேச்சு இருப்பதாக சொல்லி குஜராத் சூரத்தில் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது . இந்த வழக்கில் நான்கு ஆண்டுகளாக விசாரணை கடந்து வந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது .
ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி உடனடியாக பதவி பறிக்கப்பட்டது . இதை கண்டித்து நாடு முழுவதிலும் காங்கிரசார் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த போராட்டத்தில் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதியே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உன் நாக்கை அறுப்போம் என்று முழக்கம் எழுப்பி இருக்கிறார்கள்.
இதனால், நீதிபதி நாக்கை அறுப்பேன்னு சொன்ன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு பாதுகாப்பு, துரைமுருகன் கல்லறையில் எழுதி வைங்கன்னு சொன்னதை பதிவு செய்த தம்பி அருண்குமார் கைது! இந்த வேலையை செய்றதுக்கு தான் திமுக தொண்டர் படை இருக்கே, நீங்க சட்டம் ஒழுங்க இல்ல காப்பாத்தணும் என்று தமிழக போலீசை பார்த்து கேட்கிறார் அதிமுகவின் ஐடி விங்க் அணி தலைவர் நிர்மல்குமார்.
TN Congress Leader says once they come into power they will cut the tongue of the judge who gave verdict against Rahul.
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) April 7, 2023
As usual @tnpoliceoffl have not taken any action. pic.twitter.com/asPrwcgsk9