ஆல்வார் பாலியல் பலாத்காரம் வழக்கு.. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரிடம் பேசிய பிரியங்கா காந்தி

 
பிரியங்கா காந்தி

ஆல்வாரில் கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு, அவர்களின் நலன் குறித்து விசாரித்ததோடு, அவர்களுக்கு முழு உதவி செய்வதாகவும் பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் திஜாரா மேம்பாலத்தில் கடந்த 12ம் தேதியன்று கைவிடப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளி சிறுமி இருப்பதை அந்த பகுதி போலீசார் பார்த்தனர். இதனையடுத்து அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் அந்தரங்க பகுதியில் இருந்து அதிக அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. அந்த சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளானது தெரியவந்தது. ஆல்வார் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆளும் கட்சியான காங்கிரசுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ்

மேலும், பெண்களுக்காக குரல் கொடுக்கும் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் சென்று ஆல்வார் சம்பவம் தொடர்பாக போராட வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியது. இந்நிலையில் பிரியங்கா காந்தி போனில் பாதிக்கப்பட்ட ஆல்வார் சிறுமியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு,  அவர்களின் நலன் குறித்து விசாரித்ததோடு, அவர்களுக்கு முழு உதவி செய்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். 

புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

பிரியங்கா காந்தி நேற்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி டிவிட்டரில், மாயாவதி ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆரோக்கியமாக வைத்து நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் என்று பதிவு செய்து இருந்தார்.