வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட பிரியங்கா காந்தி.. நெருக்கடியில் காங்கிரஸ்

 
பிரியங்கா காந்தி

தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும், பணியாளர் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானதையடுத்து, பிரியங்கா காந்தி தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

 உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கோவா உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளநிலையில், நம் நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக புது வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இது அரசியல் கட்சிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரியங்கா காந்தியை மலை போல் நம்பி உள்ளது. இந்த சூழ்நிலையில்  தனது பணியாளர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால், நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் பரிசோதனை

பிரியங்கா காந்தி டிவிட்டரில், எனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும், எனது பணியாளர் ஒருவருக்கும் நேற்று (நேற்று முன்தினம்) கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் இன்று (நேற்று) சோதனை செய்ததில் நெகட்டிவ் என்று வந்தது. இருப்பினும், சில நாட்கள் நீங்கள் தனிமைப்படுத்திகொண்ட பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் என்று பதிவு செய்துள்ளார்.