மத்திய அரசு பொய்களை மட்டுமே பேசுகிறது.. யோகி அரசால் விவசாயிகளுக்கு உரம் வழங்க முடியவில்லை.. பிரியங்கா

 
பிரியங்கா காந்தி

இன்றைய மத்திய அரசு பொய்களை மட்டுமே பேசுகிறது, யோகி ஆதித்யநாத் அரசால் விவசாயிகளுக்கு உரம் வழங்க முடியவில்லை என்று பா.ஜ.க. அரசுகளை பிரியங்கா காந்தி தாக்கினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் பணவீக்கத்தை அகற்று என்ற பெயரில் மெகா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்பட பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது: நீங்கள் அவர்களை (பா.ஜ.க.) தேர்ந்தெடுத்த போது, நாடு முன்னேறும் என்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்தீர்கள். கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்று அவர்கள் கூறுவார்கள். 

பா.ஜ.க.

ஆனால் நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் என்ன செய்தீர்கள்? கடந்த ஏழு ஆண்டுகளாக? கல்விக்காக நீங்கள் கட்டிய ஒரு நிறுவனத்தையும், சுகாதாரத்திற்காக  நீங்கள் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையையும் காட்டுங்கள். நீங்கள் பறக்க பயன்படுத்தும் விமான நிலையமும் காங்கிரஸால் கட்டப்பட்டது. இன்று அரசாங்கம் காங்கிரசால் உருவாக்கப்பட்ட அனைத்தையும் நண்பர்களுக்கு விற்க விரும்புகிறது. 

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை சுமார் ரூ.1,000, கடுகு எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.200, பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. சாமானியர்கள் படும் இன்னல்களுக்கு யாரும் செவிசாய்க்காததால் நீங்கள் இன்று இங்கே இருக்கிறீர்கள். இன்றைய மத்திய அரசு பொய்களை மட்டுமே பேசுகிறது. ஒரு சில தொழிலதிபர்களுக்காக இந்த அரசு செயல்படுகிறது. விளம்பரங்களுக்கு செலவிடும் தொகையை ஏன் விவசாயிகளுக்கு வழங்குவதில்லை? உத்தர பிரதேச அரசு விளம்பரங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது. ஆனால் அதே அரசால் விவசாயிகளுக்கு உரம் வழங்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.