டைம் எல்லாம் கேட்கல… ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்து விடுவேன்.. பிரியங்கா காந்தி

டைம் எல்லாம் கேட்கல… ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்து விடுவேன்.. பிரியங்கா காந்தி

டெல்லி லோதி எஸ்டேட்டில் 35 எண்ணுள்ள பங்களாவில் வசித்து வரும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அங்கியிருந்து வெளியேறும்படி பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் கடந்த1ம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அதற்கு பிறகும் வீட்டை காலி செய்யவில்லை என்றால், விதிமுறைப்படி சேதாரம் அல்லது அபராத வாடகை வசூலிக்கப்படும் என அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

டைம் எல்லாம் கேட்கல… ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்து விடுவேன்.. பிரியங்கா காந்தி
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும், பிரியங்கா காந்தி இது குறித்து எந்தவித கருத்தும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், பிரியங்கா காந்தி பங்களாவை காலி செய்ய மத்திய அரசிடம் காலஅவகாசம் கேட்டதாகவும், மத்திய அரசும் காலஅவகாசம் வழங்கியதாகவும் ஒரு செய்தி வெளியானது. இதனை பிரியங்கா காந்தி தற்போது மறுத்துள்ளார்.

டைம் எல்லாம் கேட்கல… ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்து விடுவேன்.. பிரியங்கா காந்தி

இது தொடர்பாக பிரியங்கா காந்தி டிவிட்டரில், இது போலி செய்தி, நான் அது போன்று எந்தவொரு கோரிக்கையும் மத்திய அரசிடம் கேட்கவில்லை. கடந்த 1ம் தேதியன்று என்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதத்தின்படி, ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் 35 லோதி எஸ்டேட்டிலுள்ள அரசு தங்குமிடத்தை காலி செய்வேன். என பதிவு செய்து இருந்தார்.