தலித் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்.. குற்றவாளிகளை 24 மணி நேரத்துக்குள் பிடிக்காவிட்டால் போராட்டம்.. பிரியங்கா காந்தி

 
தலித் சிறுமி தாக்கப்படும் காட்சி

உத்தர பிரதேசத்தில் தலித் சிறுமியை தாக்கிய 24 மணி நேரத்துக்குள் பிடிக்காவிட்டால், தீவிர போராட்டம் மூலம் உங்களை (யோகி ஆதித்யநாத் அரசு) எழுப்ப காங்கிரஸ் பாடுபடும் என்று பிரியங்கா காந்தி எச்சரிக்கை செய்தார்.


உத்தர பிரதேசம் அமேதி மாவட்டத்தில்  16 வயது தலித் சிறுமியை சிலர் கம்பால் அடித்து துன்புறுத்திய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தலித் சிறுமியை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு பிரியங்கா காந்தி எச்சரிக்கை விடுத்தார்.

பிரியங்கா காந்தி
 
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட்டரில், தலித் சிறுமியை சிலர் தாக்கும் வீடியோவை பதிவேற்றம் செய்து,  இந்த (தலித் சிறுமி மீதான தாக்குதல்)  மனிதாபிமானமற்ற செயலை செய்த குற்றவாளிகளை 24 மணி நேரத்துக்குள் பிடிக்காவிட்டால், தீவிர போராட்டம் மூலம் உங்களை (யோகி ஆதித்யநாத் அரசு) எழுப்ப காங்கிரஸ் பாடுபடும். அமேதியில் தலித் சிறுமியை ஈவிரக்கமின்றி தாக்கிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. 

கைது

யோகி ஆதித்யநாத் ஐயா, உங்கள் ஆட்சியில் தினமும் சராசரியாக 34 தலித்துகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும், 135 பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களும் நடக்கின்றன. ஆனாலும் உங்கள் சட்டம் ஒழங்கு தூங்குகிறது என்று பதிவு  செய்து இருந்தார். அமேதி துணை போலீஸ் கண்காணிப்பாளர் அர்பித் கபூர் கூறுகையில், தலித் சிறுமியை தாக்கிய வழக்கில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.