உத்தரகாண்டில் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் இரு கைகளாலும் அரசை கொள்ளையடித்தனர்.. காங்கிரஸை தாக்கிய மோடி

 
மோடி

உத்தரகாண்டில் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் இரு கைகளாலும் அரசை கொள்ளையடித்தனர் என்று பிரதமர்  மோடி காங்கிரஸை மறைமுகம் தாக்கினார்.
 
உத்தரகாண்ட் மாநிலம் ஹலத்வானியில் நேற்று பிரதமர் மோடி ரூ.17,500 கோடி மதிப்பிலான மொத்தம் 23 வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: துவக்கப்பட்ட இந்த வளர்ச்சி திட்டங்கள் ஹல்த்வானி மக்களுக்கு சிறந்த இணைப்பையும், சிறந்த ஆரோக்கியத்தையும் வழங்கும். ஹல்த்வானியின் ஒட்டு மொத்த உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக, தண்ணீர், கழிவுநீர், சாலை, வாகன நிறுத்தம் மற்றும் தெருவிளக்குகள் ஆகியவற்றுக்காக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.

காங்கிரஸ்

உத்தர காண்டில் வேகமாக வளர்ந்த வரும் உள்கட்டமைப்பு, சார் தாம் மெகா திட்டம், புதிய ரயில் பாதைகள் போன்றவை இந்த பத்தாண்டுகளை உத்தரகாண்டின் பத்தாண்டுகளாக மாற்றும். சுதந்திரத்திற்கு பிறகு, உத்தரகாண்ட் இரண்டு வகையான அரசியலை கண்டுள்ளது. ஒன்று, மலைகளின் வளர்ச்சியை பறிப்பது. மற்றொன்று, மலைகளின் வளர்ச்சிய உறுதி செய்வதில் அனைத்தையும் வைப்பது (செய்வது). உத்தரகாண்ட் அதன் இருப்பு 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கொள்ளையடித்தாலும் பரவாயில்லை, ஆனால் எனது அரசு காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னவர்கள் நடத்தும் அரசாங்கங்களை இத்தனை ஆண்டுகளாக பார்த்திருப்பீர்கள். அவர்கள் இரு கைகளாலும் அரசை கொள்ளையடித்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தை நேசிப்பவர்கள் அப்படி நினைக்கவே முடியாது.

 தனக்பூர்-பாகேஷ்வர் ரயில் பாதை

இப்போது பொதுமக்களுக்கு அவர்களின் (எதிர்க்கட்சிகள்) உண்மை தெரிந்து விட்டது. இந்த மக்கள் (எதிர்க்கட்சியனர்) வதந்திகளை உற்பத்தி செய்து, பரப்பி, பின்னர் அலறிக் கொண்டு புதிய வதந்தியை தொடங்கியுள்ளனர். இந்த உத்தரகாண்ட் கிளர்ச்சியாளர்கள் தனக்பூர்-பாகேஷ்வர் ரயில் பாதை குறித்தும் வதந்திகளை பரப்புகிறார்கள். முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பது அவர்களின் நிரந்த முத்திரையாக இருந்து வருகிறது. இன்று தொடங்கிய லக்வார் திட்டத்துக்கும் அதே வரலாறு உண்டு. 1976ல் முதல் முதலாக இந்த திட்டம் குறித்து நினைக்கப்பட்டது. ஆனால் 46 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நமது அரசு அடிக்கல் நாட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.