காங்கிரஸின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல.. பிரசாந்த் கிஷோர் தாக்கு

 
பிரசாந்த் கிஷோர் பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸின் தலைமை என்பது ஒரு தனிபரின் தெய்வீக உரிமை அல்ல, எதிர்க்கட்சி தலைமை ஜனநாயக ரீதியாக முடிவு செய்யப்படட்டும்  என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

2024ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்தே தீர வேண்டும் என்பதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் உறுதியாக உள்ளன. இதற்காக இப்போதே அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியாக ஒருங்கிணைக்கும் வேளையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க. எதிராக மெகா கூட்டணியை அமைக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் தயாராக உள்ளன. 

மம்தா பானர்ஜி

ஆனால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது யார் என்பதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. காங்கிரஸ் தலைமையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. மம்தா பானர்ஜி கடந்த சில தினங்களுக்கு முன் மும்பையில் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை, அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை எளிதாக தோற்கடித்து விடலாம் என்று காங்கிரஸை மறைமுகமாக தாக்கினார். தற்போது தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் தன் பங்குக்கு காங்கிரஸை விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ்

பிரசாந்த் கிஷோர் டிவிட்டரில், காங்கிரஸ் பிரநிதித்துவப்படுத்தும் சிந்தனை மற்றும் ஸ்பேஸ் ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கு இன்றியமையாதது. ஆனால் காங்கிரஸின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல, குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் கட்சி (காங்கிரஸ்) 90 சதவீதத்துக்கும் அதிகமான தேர்தல்களை இழந்திருக்கும் போது. எதிர்க்கட்சி தலைமை ஜனநாயக ரீதியாக முடிவு செய்யப்படட்டும் என்று பதிவு செய்துள்ளார்.