பா.ஜ.கவை தோற்கடிக்க விரும்பும் எந்த கட்சிக்கும் 5 முதல் 10 ஆண்டு கால கண்ணோட்டம் இருக்க வேண்டும்.. பிரசாந்த் கிஷோர்

 
பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

பா.ஜ.கவை தோற்கடிக்க விரும்பும் எந்தவொரு கட்சிக்கும் அல்லது தலைவருக்கும் 5 முதல் 10 ஆண்டு கால கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த சுற்றில் (எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல்களில்) பா.ஜ.க. அனைத்திலும் வெற்றி பெற்று, 2024ல்  (மக்களவை தேர்தலில்) தோல்வியை தழுவது சாத்தியம்தான். 2012ல் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடியும், உத்தரகாண்டில் காங்கிரஸூம், மணிப்பூரை காங்கிரஸூம், பஞ்சாபில் அகாலி தளமும் வெற்றி பெற்றன. ஆனால் 2014ல் (மக்களவை தேர்தலில்) விளைவு மிகவும் வித்தியாசமாக (பா.ஜ.க. வெற்றி) இருந்தது.

பா.ஜ.க.

உத்தர பிரதேசத்தில் நீங்கள் பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டுமானால் சமூக அடித்தளத்தை விரிவுப்படுத்துவது இன்றியமையாதது. ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் சமூக அடித்தளம் இன்று இருப்பதை விட பெரியதாக இருக்க வேண்டும். அது யாதவ் இல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது தலித்துக்களை மேலும் ஒருங்கிணைத்தாலும் சரி அல்லது உயர் சாதியினராக இருந்தாலும் சரி. பா.ஜ.கவை தோற்கடிக்க விரும்பும் எந்தவொரு கட்சிக்கும் அல்லது தலைவருக்கும் 5 முதல் 10 ஆண்டு கால கண்ணோட்டம் இருக்க வேண்டும். அதை (பா.ஜ.க.வை வீழ்த்துவது) 5 மாதங்களில் செய்து விட முடியாது. ஆனால் அது நடக்கும். அதுதான் ஜனநாயகத்தின் பலம்.

காங்கிரஸ்

இந்துத்துவா, அதீத தேசியவாதம் மறறும் பொது நலன் போன்ற பிரச்சினைகளை பயன்படுத்தி பா.ஜ.க. மிகவும் வலிமையான கதையை முன்வைத்துள்ளது. அதேசமயம் எதிர்க்கட்சிகள் அவற்றில் குறைந்தபட்சம் 2 விஷயங்களில் பா.ஜ.க.வை முந்த வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதை விட பலவற்றை செய்ய (மெகா கூட்டணி அமைத்தல்) செய்ய வேண்டும். ஒரு கட்சியையோ அல்லது ஒரு நபரையோ தோற்கடிக்கும் எண்ணத்தால் எனது வாழ்க்கை இயங்கவில்லை. நம் நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை என்று நான் நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் (எதிர்க்கட்சி சித்தாந்தத்துடன்) அதிகம் இணைந்திருப்பதாக உணர்கிறேன். காங்கிரஸை ஒரு ஐடியாவாக பலவீனப்படுத்த அனுதிக்கக் கூடாது.