நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்.. ராகுல் காந்தியை கிண்டலடித்த மத்திய அமைச்சர்.

 
பிரகலாத் ஜோஷி பிரகலாத் ஜோஷி

நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு ராகுல் காந்தி முன்னேறி இருப்பது நல்லது விஷயம் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கிண்டல் செய்துள்ளார்.

உத்தர பிரதேசம் லக்கீம்பூர் கெரி மாவட்டத்தில் அக்டோபர் 3ம் தேதியன்று மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் 4 விவசாயிகள்  உள்பட மொத்தம் 8 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம், சிறப்பு புலனாய்வு குழு, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் மகன் ஆஷிஷ் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 13  பேரை கைது செய்ய கோரியது.

லக்கிம்பூர் வன்முறை சம்பவம்

இதனால் லக்கிம்பூர் கெரி சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ராகுல் காந்தி லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்த ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தார். ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்ததை, இப்பம் ராகுல் காந்தி முன்னேற்றம் அடைந்து இருக்கிறார் என்று   மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கிண்டல் செய்துள்ளார்
.ராகுல் காந்தி

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது. நோட்டீஸ் வரட்டும் பிறகு பார்க்கலாம். குறைந்தபட்சம் நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு ராகுல் காந்தி முன்னேறி விட்டார். முன்பெல்லாம் ராகுல் காந்திக்கு முன்னால் நாடாளுமன்றம் ஒன்றுமில்லை, நோட்டீஸ் கொடுக்கவில்லை. இப்போது நோட்டீஸ் கொடுக்க ஆரம்பித்திருப்பது நல்ல விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.