4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்- 3 அமைச்சர்களின் பதவி பறிப்பு?

 
கோயில் சொத்துகள் மீட்பு - முதல்வர் விஜய் ஆலோசனை

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைதேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. 


தேர்தல் முடியும் முன்பே தவெக கூடாரத்தில் அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சு தொடங்கியுள்ளது.  யார் இருப்பார்கள்?, யார் வெளியேறுவார்கள்?, யாருக்கு புதிய பதவி? என்கிற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. முதல்வர் விஜய் கைவசம் உள்ள நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் அமைச்சர் ராஜ்மோகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அமைச்சர்கள் சரத், ஜெகதீஸ்வரி, விஜய் பார்த்திபன் ஆகியோர் பதவி பறிக்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மதுரைக்கு மீண்டும் ஒரு அமைச்சர் வழங்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். மக்கள் மன்றம் தொடங்குவதற்கு முன்பே விஜய் ரசிகர் மன்ற காலத்திலிருந்தே விஜய்யுடன் பயணித்தவர், மதுரையை சேர்ந்த ஒரு தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


யார் செயல்படுகிறார்கள்?, யார் கட்சிக்காக நிற்கிறார்கள்?, யார் மக்கள் மன்ற காலத்திலிருந்து விஜய்யுடன் பயணிக்கிறார்கள்? எல்லாவற்றையும் பார்த்துதான் புதிய அமைச்சரவை தேர்வு செய்யப்படுமாம்! பல ஆண்டுகளாக ரசிகர் மன்ற காலத்திலிருந்து விஜய்யுடன் பயணித்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரை ஓரம்கட்டி மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை விஜய் விரும்பவில்லை என்கிறார்கள்.